உள்நாடு

பேருவளை பாஸியதுன் நஸ்ரியா வித்தியாலயத்தின் 100வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழா..!

‘முஸ்லிம் சமூகம் கல்வியில் மென் மேலும் முன்னேற வேண்டும். பெறுமதியான மாணிக்கக் கற்களைப் போல் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த அறிவை பெற்றுக்கொடுத்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் உகந்த பயனுள்ள பிரஜைகளாக மாற்ற திடசங்கட்பம் பூணுங்கள்’ என ஊடகத்துறை,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன பேருவளையில் தெரிவித்தார்.
பேருவளை மருதானை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவின் முதல் கட்டமாக நினைவு முத்திரை வெளியீட்டு விழா 18ஆம் திகதி இடம் பெற்றது. நிகழ்வு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் அழைப்பில் பங்கு பற்றிய அமைச்சருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாடசாலையின் நூற்றாண்டு விழாவையெட்டி இலங்கை தபால் திணைக்களம் முதல் நாள் விஷேட உரையுடன் 25 ரூபாய் பெருமதியான நியாபகாரத்தை முத்திரையை வெளியிட்டுள்ளன.

அதிபர் மஸ்னவியா ரிப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது,

அராபியர் முதல் முதலாக காலடி எடுத்த பூமியாகவும் முதலாவது பள்ளிவாசல் மற்றும் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரி அமைகிய பெற்ற வரலாற்று சிறப்புமிக்க பிரதேசமாக பேருவளை திகழ்கிறது.
இத்தகைய சிறப்புப் பெற்ற பேருவளையில் முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் அவரது புதல்வர் இம்தியாஸ் ஆகியோர் அரசியலில் புகழ்பெற்றவர்களாவர்.
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இப் பாடசாலையிலிருந்து சட்டத்தரணிகள்,சிவில் சேவையாளர்கள்,கணக்காளர்கள்,அதிபர்கள் என பல பெண் புத்திஜீவிகள் உருவானதாக இம்தியாஸ் எம்.பி. இங்கு பேசும்போது குறிப்பிட்டார். இனி வருடம் 100 வருடத்தில் நவீன விஞ்ஞான,தகவல் தொழில்நுட்பத்திற்கேற்ற புத்திஜீவிகள் உருவாக வேண்டும்.கல்வி பிரபல்யமான ஒரு ஆயுதம். உலகையே மாற்ற அதைப் பயன்படுத்தலாம் என அன்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். எல்லாச் செல்வத்தையும் அழிக்கலாம். ஆனால் கல்வி உயிர் உள்ள வரை அழியாது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த அறிவை புகட்ட வேண்டும்.
இந்தியாஸ் பாக்கீர் மக்காருடன் அமைச்சரவையில் ஒன்றாய் இருந்துள்ளேன். அவரின் அழைப்பில் இன்றைய விழாவில் பங்கு பற்ற கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
குரோத,வைராக்கிய அரசியல் மூலம் ஒருபோதும் நாட்டை கட்டி எழுப்ப முடியாது. நாம் அனைவரும் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒரு தாய் மக்களாக வாழ்வோம் என்றார்.

இந்தியாஸ் எம்.பி பேசும்போது கூறியதாவது, ஆரம்பத்தில் ஓர் மதரஸாவாக இருந்த அல் பாஸியத்துல் நஸ்ரியா பின்னர் ஓர் கல்வி கூடமாக மாற்றப்பட்டது.அரச பாடசாலையாக இருந்த இப் பாடசாலைக்கு அப்போதைய அரசினால் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. அப்போது களுத்துறை அரசாங்க அதிபராக இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாட்டனார் கடமையாற்றினார். அவரால் அக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக பதவி வகித்த சமயம் அவரை இப்பாடசாலைக்கு அழைத்து வந்தேன்.

பாஸியத்துல் நஸ்ரியா பாடசாலை முஸ்லிம் சமூகத்திற்கு தலைசிறந்த புத்திஜீவிகளையும் துறைசார் நிபுணர்களையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
அன்று முஸ்லிம் சமூகத்தில் பெண் கல்விக்கு இடையூறு இருந்தது. பெண்களுக்காக பாடசாலைகளை உருவாக்க பாடுபட்ட அவர்களது வீடுகளுக்கு கல் வீச்சும் மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலமை படிப்படியாக மாறின. இன்று முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறி உள்ள நிலை காணப்படுகிறது.பல உயர் அரச பதவிகளில் முஸ்லிம் பெண்கள் உள்ளனர் என்றார்.
கோட்டக்கல்வி பணிப்பாளர் சோமரத்ன பேசும் போது ஆசிரியர் பற்றாக்குறைக்கு மத்தியில் கூட இப்ப பாடசாலை நல்ல நிலையில் காணப்படுகிறது.அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் ஒன்றாய் இணைந்து பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகின்றனர். அதிபர் கல்வித் திணைக்களத்திடம் கேட்பதெல்லாம் ஆசிரியர்களை மாதாந்தம்மூன்று இலட்சம் ரூபாவை மேலதிக ஆசிரியர்களுக்கு வழங்கு செலவு செய்கின்றனர் என்றார்.
முன்னாள் எம்.பி. அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.அஸ்லம்,முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜெமீல்,எம்.எம்.அம்ஜாத்,கல்விப் பணிப்பாளர் விக்ரம ஆராய்ச்சி,கோட்டக்கல்வி பணிப்பாளர் சோமரத்தின,பிரதேச செயலாளர் ரஞ்சன் பெரேரா,தபால் திணைக்கள உயரதிகாரிகள்,தர்கா நகர் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம், இரத்தினக்கல் வர்த்தகர்கள்,உலமாக்கள்,வைத்தியர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள்,மாணவர்கள் என பெருமளவிலானோர் நிகழ்வில் பங்கு பெற்றனர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *