உள்நாடு

“நாங்கள் முன்மொழிவது நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்புகின்ற நடுநிலையத்தையாகும்..” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24)

நாங்கள் பல்வேறு தொழில்புரிவோரிடம் பணியாற்றி வருகிறோம். பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்முனைவோர், சட்டத்தரணிகள் என்ற வகையில் செயலாற்றி வருவதோடு இங்கே இருப்பவர்கள் பாரிய யுத்தம் நிலவுகையில் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தனித்துவமான தொழிலொன்றைத் தெரிவுசெய்த குழுவினவாவர். அதனால் நீங்கள் தனித்துவமான மனிதக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்களின் தொழில்சார் செயற்பொறுப்பினை முறைப்படி ஈடேற்றினாலும் தற்போது எஞ்சியிருப்பதோ சீரழிந்த தேசமாகும். அதனால் எம்மெதிரில் இருப்பது கிரிஎல்லவிற்குப் பதிலாக கிரிஎல்லவின் மகளைக் கொண்டுவருவது போன்ற வேலையல்ல. ராஜபக்ஷவிற்குப் பதிலாக ராஜபக்ஷவின் தம்பியொருவரை அல்லது புதல்வனொருவனைக் கொண்டுவருவது போன்ற வேலையல்ல. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நல்லெண்ணத்துடன் இடையீடுசெய்கின்ற மனிதக் குழுமமொன்றின் செயற்பாடொன்று அவசியமாகி இருக்கின்றது. ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பல இடங்களில் தவறிழைத்துள்ளோம். இந்தியா சுதந்திரம் பெறும்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அந்த தேசிய இயக்கத்திற்கான முன்னேற்றகரமான ஒரு நோக்கு இருந்தது. மதங்களென்றவகையில் சமயங்களென்றவகையில் பிளவுபட்ட மக்களுடன் ஒரே இந்தியக் கொடியின்கீழ் கொண்டுவருவதற்கான பாரிய நோக்கு இருந்தது. அந்த நோக்கிற்கிணங்க கட்டியெழுப்பப்பட்ட இந்திய தேசம் சந்திரன்மீது விண்கலமொன்றை தரையிறக்கும்போது எமது நாடு எந்த இடத்தில் இருக்கின்றது? அவர்கள் பாரிய இலக்கியகலைகள், கலாசார எழுச்சியை கட்டியெழுப்பி உள்ளார்கள். சீனாவை எடுத்துக்கொண்டாலும் அப்படித்தான். விளையாட்டுச் சாமான்களின் தயாரிப்பில் இருந்து பாரிய தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்திசெய்து உலக சந்தையில் பாரிய பலத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. பிரான்ஸ் தேசத்திற்கு கட்டுப்பட்டிருந்த, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இலக்காகிய வியட்நாம் அண்மைக்காலமாக ஆசியாவில் வேகமாக வளர்ந்து வருகின்ற நாடாக மாறியுள்ளது. எனினும் எமது நாடு இருப்பது உலகின் முன்னிலையில் வங்குரோத்துநிலைக்கு உள்ளாக்கப்பட்ட வெட்கித்தலைகுனிகின்ற நாடாகவே விளங்குகின்றது. இருபதாம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தில், கல்வியில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது?

இந்தியாவைப்போல் தேசத்தை ஒரு கொடியின்கீழ் கொண்டு வருகின்ற வெள்ளைக்காரனுக்குப் பின்னர் சுதந்திரம் கிடைத்துவிட்டது எனும் பாரிய உணர்வு மக்களிடம் இருந்திருக்கக்கூடும். ஆனால் இந்தியாவைக் கொண்டு செல்கின்ற திசை பற்றி நேருவிற்கும், சீனாவைக் கொண்டுசெல்கின்ற திசை பற்றி மாவோசேதுங்கிற்கும், வியட்நாமைக் கொண்டுசெல்கின்ற திசைபற்றி ஹோசிமிங்கிற்கும், ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டுசெல்கின்ற திசை பற்றி லிங்கனுக்கும் இருந்த பாரிய நோக்கு எமது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் சுதந்திரம் கிடைத்ததும் உடனடியாக பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கு இருந்த பிரஜா உரிமையை இல்லாதொழித்தார்கள். வடக்கில் செல்வநாயகம் இடையீடுசெய்து இந்த பிரஜா உரிமைச் சட்டத்தை அமுலாக்கிய பின்னரே தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். எமது தலைவர்களுக்கு மக்களைப் பிரிக்கின்ற நோக்கேயன்றி ஒரு கொடியின்கீழ் ஒருங்கிணைப்பதற்கான நோக்கு இருக்கவில்லை. 1956 இல் மொழிப் பிரச்சினையொன்றை பற்றவைத்தார்கள். 1958 சிங்கள – தமிழ் கலவரமொன்றை பற்றவைத்தார்கள். 1965 அளவில் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” என ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாறாகும்வேளையில் வடக்கில் பிரிவினைவாத இயக்கமொன்று உருவாகத் தொடங்கியது. 1981 இல் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் நாடு பூராவிலும் இனவாத முரண்பாட்டினைத் தொடங்கிவைத்து பாரிய யுத்தம்வரை இட்டுச்சென்றார்கள். 2009 இல் அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் 2015 அளவில் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகளில் ஆரம்பித்து 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த காலத்திலும் பல்வேறு பலம்பொருந்திய அமைப்புகள் எமது நாட்டைக் கொண்டுசெல்லவேண்டிய திசைபற்றி இலக்கியம், கலைகள், கலாசாரம் கொண்டுசெல்லப்படவேண்டிய திசை பற்றிய ஆழமான உரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கின்ற, நாட்டை மின்னியல்மயப்படுத்துதல் பற்றி 1919 இல் திரு. விமலசுரேந்திர ஒரு நோக்குடன் விடயங்களை முன்வைத்தார். 1918 இல் ஊடகவியலாளரொருவர் லெனினிடம் “சோஷலிஸத்தை நிறைவுசெய்வது எப்போது” எனக் கேட்கிறார். ”சோவியத்தேசத்தை மின்னியல்மயப்படுத்தி நிறைவுசெய்கின்ற நாளிலேயே” என லெனின் பதிலளிக்கிறார். திரு. விமலசுரேந்திர 1919 இல் லக்ஷபான மின்நிலையம் தொடர்பாக சமர்ப்பித்த பத்திரத்தில் அந்த மேலதிகமான மின்சாரத்தை மின்சார ரயில் ஓட்டுவதற்காக பயன்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். எமது எதிர்காலம் பயணிக்கவேண்டிய திசைபற்றிய கருத்து அவரிடம் இருந்தது. விமலசுரேந்திரவிற்கு, மார்டின் விக்கிரமசிங்கவிற்கு, சரத்சந்திரவிற்கு, எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசை பற்றிய நோக்கு இருந்தது. சேனக்க பிபிலேவிற்கு எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசை பற்றிய நோக்கு இருந்தது. ஓளடதக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சேனக்க பிபிலேவின் நோக்கின்படி அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது தேசிய ஓளடதக் கொள்கையை அமைத்துக்கொண்டன. எனினும் எமது நாட்டில் சேனக்க பிபிலேவை ஓளடதக் கூட்டுத்தாபனத்தில் இருந்து வெளியே போட்டார்கள். வெளியில் உருவாகிக்கொண்டிருந்த புதிய சிந்தனை ஓட்டத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்த ஆட்சியாளர்கள் கடந்தகாலப் பெருமைபற்றி பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.

எமது ஒட்டுமொத்த சமூகமும் சிந்தனையும் கடந்தகாலமோகத்தின் சிறைக்குள் சிறைப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்தி அளவுகோல்களை வரலாற்றின்பேரில் அளவிடத் தொடங்கினார்கள். எனினும் உலகமானது பாரிய பாய்ச்சலுடன் முன்நோக்கி நகர்ந்தது. எமது நாட்டை பராக்கிரமபாகு யுகத்திற்கு கொண்டுசெல்வதாக 2005 இல் ரணில் விக்கிரமசிங்க கூறினார். உலகம் பலநூற்றாண்டுகளாக முன்நோக்கிப் பயணிக்கையில் எமது நாட்டுத் தலைவர்கள் வரலாற்று மகிமைபற்றி பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.

கொரியா கொஸ்மெடிக் கைத்தொழில் மூலமாக பொழுதுபோக்கினை வழங்குவதன் மூலமாக உலகத்திற்கு திறந்துவிடப்பட்டது. பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஒருசில பாடல்களை ஆயிரத்துஎண்ணூறு மில்லியன் பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். நாட்டில் இருப்பவர்கள் ஐம்பது மில்லியன் மக்களே. முன்னர் எமது குடிசைக் கவிதைகள், வண்டிப் பாடல்கள் எல்லைக்கு அப்பால்சென்று பாரிய வணிக எல்லைகளை அடைவதில் வெற்றிபெறவில்லை. அவர்கள் உலகத்திற்காக இசையை உருவாக்குகையில் எம்மை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி 20 வது நூற்றாண்டினை மிஸ்பண்ணிய ஆட்சியாளர்கள் முழு நாட்டையுமே சிறைப்படுத்தினார்கள். அதனாலேயே எமது நாட்டுக்கு புதிய மறுமலர்ச்சி யுகமொன்று அவசியமாகின்றது. அதனால் கிரிஎல்லவிற்குப் பதிலாக மகள், பிரேமதாசவிற்கப் பதிலாக மகன், ராஜபக்ஷவிற்குப் பதிலாக ராஜபக்ஷ மகன் அல்லது தம்பியைக் கொண்டுவந்து அதனை மாற்றியமைத்திட முடியாது. அவர்கள் ஏறுவது மாட்டு வண்டியிலேயே. நாங்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மின்சார ரயிலில் எற்றுகின்ற யுகமொன்றை உருவாக்கிடுவோம். ஜப்பானின் பொருளாதாரத்தை இலக்காகக்கொண்ட அபிவிருத்தியின்போது மனித உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. விவாகம் செய்துகொள்கின்ற சதவீதம் வீழ்சியடைந்து தற்கொலை புரிந்துகொள்கின்ற சதவீதம் அதிகரித்து வருகின்றது. பொருளாதாரம் பாய்ச்சலுடன் முன்னேறி வந்தாலும் சமூக உறவுகளை சிதைத்தால் பலனில்லை. எமக்கு அவசியமாவது பண்டைய நுகத்தடியிலிருந்து பொருளாதார பயணப்பாதையில் இருந்து விடுபட்டு புதிய திசையை நோக்கி சமூகத்தை மாற்றிக்கொள்வதே எமது தேவைப்பாடாகும்.

அமைச்சரவைக்கு யாரை நியமிப்பீர்கள் என ஒருசிலர் எம்மிடம் கேட்கிறார்கள். நியமிக்கப்படுகின்ற அமைச்சருக்கு அனைத்தையும் முடிச்சுப்போட்டுக்கொண்டு செல்வதே பண்டைய யுகத்தில் இருந்தது. எனினும் அமைச்சரொருவரை அரசியலமைப்பின்படி நியமித்தாலும் கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சபையைக்கொண்ட கூட்டான தீர்மானத்தை மேற்கொள்கின்ற அலகு ஒன்றை நியமிப்பதே எமது தேவையாகும். பாதுகாப்பும் அவ்வாறானதே. நாங்கள் தேசிய பாதுகாப்பு பற்றிய எக்ஸ்பர்ற்ஸ் அல்ல. ஆனால் அது பற்றிய சிறப்பறிஞர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் அது பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். மறுபுறத்தில் தேசிய பாதுகாப்பு என்பது பைனேற்றினை கையில் ஏந்திய சிப்பாய் ஒருவரை சந்தியில் நிறுத்திவைப்பதில்லை. அதனைச் சூழவுள்ள ஒட்டுமொத்த பிரஜைகளின் உயிர்களால் பிரதிபலிக்கப்படுகின்றது. அதனால் பண்டைய முறைமையை மனதில் வைத்துக்கொண்டு எம்மிடம் கேள்விகேட்பதற்குப் பதிலாக புதிய மாற்றம் பற்றிய சித்திரமொன்றை மனதில் வடித்துக்கொண்டு கேள்விகளைக் கேட்குமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் முன்மொழிவது நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்பகின்ற நடுநிலையத்தையாகும். நாங்கள் முன்மொழிவது வெறுமனே பொருளாதாரப் பயணம் மாத்திரமல்ல. மனித சிந்தனையின் புதிய மாற்றமொன்று பற்றியதாகும்.

நிலவுகின்ற அரச சேவை சம்பந்தமாக நாங்கள் முன்மொழிவது சிந்தனைரீதியாக மாற்றமடைந்த ஒரு அரச சேவை பற்றியதாகும். பழைய இடத்தில் இருந்த தலைவர்கள் எவ்வளவுதான் பல்டி அடித்தார்கள்? அந்த தோல்விநிலைக்குப் பதிலாக நாங்கள் முன்மொழிவது புதிய எழுச்சியொன்றையாகும்! அந்த புதிய இடமென்பது அரசியல்வாதி மக்களுக்கு எதிராக மறைந்திருக்கின்ற இடமல்ல, அரசியல்வாதிக்கும்’ மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவுகின்ற இடமாகும். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து படைக்கப்பட்டவர்களெனவும் குடிமக்கள் பாதத்தால் படைக்கப்பட்டவர்கள் எனவும் நினைக்கிறார்கள். நாங்கள் முன்மொழிவது பிரஜையின் வேதனையை தனது வேதனையாக உணர்கின்ற புதிய அரசியலாகும். கூட்டுமனப்பான்மை, மானிட ஈடுபாடுகள், ஆன்மீக ஈடுபாடுகள், பிறர்மீது ஒத்துணர்வுடன் நோக்குகின்ற மனித சமூகமொன்றின் புதிய பொருளாதாரப் பாதையொன்றை நாங்கள் முன்மொழிகிறோம். எமது மகள்மார்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த சமூகமொன்று. சீருடையைப் பார்த்தால் பயமாக எமது தோழர் அமரகீர்த்தி கூறினார். எனினும் எமது பிள்ளைகளுக்கு சகோதரிகளுக்கு பயமேற்படுவது சீருடையைப் பார்த்தால் மாத்திரமா? இல்லை. சமூகத்திற்பகும் பயம். நட்புறவுமிக்க பொலீஸ் மற்றும் முப்படையினர் போன்றே ஒத்துணர்வுகொண்ட சமூகமொன்றும் தேவை. சுகாதார அமைச்சர் மருத்துகளில் இருந்து திருடுகின்ற, பிரதமர் மத்திய வங்கியில் கைவைக்கின்ற ஒரு நாடு எமக்கு அவசியமாகும்? இந்த சீரழிவிற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி எமக்கு அவசியமாகும்.

வெள்ளைக்காரன் வெளியேறியதும் அன்று இருந்த எமது மூத்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்? இந்த ஆட்சிமுறைமையைக் கவிழ்த்துவிட்டால் அந்த உணர்வே மக்களுக்கு பாரிய மலர்ச்சியையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்திவிடும். வெள்ளைக்காரன் 133 வருடங்கள். இந்த ஆட்சியாளர்கள் 76 வருடங்கள். வெள்ளைக்காரனின் அழுத்தத்தை நாங்கள் உணரவில்லை. இந்த ஆட்சியாளர்களின் அழுத்தத்தை நாங்கள் அனுபவித்தோம். ஒற்றோபர் மாதமளவில் விடுதலை பெற்றமைக்கான மகிழ்ச்சியை நாங்கள் அனுபவிப்போம். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து ஆட்சி முறைமையை மாற்றிவிட்டாலேயே மக்கள் பாரிய எழுச்சிபெற்று நாட்டைக் கட்டியெழுப்பிட முன்வருவார்கள். எமக்கு எமது பெருநிலத்தில் பிறந்த விஞ்ஞானிகளிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பயன்பெற முடியாவிட்டாலும் உலகிற்கு முக்கியமான எம்மவர்கள் பெருந்தொகையினராக உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். புற்றுநோய்க்கு புதிய ஓளடதமொன்றை கண்டுபிடித்தல் தொடர்பான ஆராய்ச்சியொன்றை மேற்கொண்டு வருகின்றவர் அமெரிக்காவின் ஹுஸ்டன் பிரதேசத்தில் இருக்கின்ற எமது கட்சியின் அமைப்பாளராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவின் ஆராய்ச்சிகளுக்கான பிரதானமான சபையின் அங்கத்தவராவார். அவர்கள் முண்டியடித்துக்கொண்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வரத்தயாராக உள்ளார்கள். அந்த அனைவரதும் நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்படாதவகையில் செயலாற்றுவதே அரசியல்வாதிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்ற அடிப்படைப் பொறுப்பு. தேர்தலின்போது எம்மீது நம்பிக்கை வைக்காத குழுக்களும் அதன்பின்னர் எம்மை நம்புமளவிலான மாற்றமொன்றை நாங்கள் மேற்கொள்வோம். இங்கு குழுமியுள்ள நீங்கள் திடசங்கற்பமுள்ளவர்களாக செயலாற்றி சவால்களை வென்றெடுப்பதைப்போன்றே கண்டி மாவட்டத்தை வெற்றியீட்டச் செய்விக்கின்ற கொடியை கையில் ஏந்துங்கள். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முப்பது வருடங்களுக்கு மேல் காலம் கழிந்தது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரமேலும் ஆறுமாதங்களே இருக்கின்றன. அந்த காலத்திற்குள் வெற்றியைப் பெறுகின்ற உறுதியான திடசங்கற்பத்துடன் முன்னணிக்கு வந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *