உலகம்

நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல்வாதி..! – திடுக்கிடும் சம்பவம்..!

இந்தியாவில் ஐஎன்எல்டி ஹரியானா பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்திய தேசிய லோக்தளத்தின் ஹரியானா மாநிலப் பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ ஜஜ்ஜார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார். ஜஜ்ஜாரின் பஹதுர்கர் நகரில், முன்னாள் எம்.எல்.ஏ நஃபே சிங் ரதீ பயணம் செய்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்ட மூன்று தனியார் துப்பாக்கிதாரிகளும் தாக்குதலில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐஎன்எல்டி தலைவர் அபய் சௌதாலா, ரதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், மாநில அரசு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இந்த தாக்குதல், பாஜக ஆளும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் எம்.எல்.ஏ.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *