சட்டத்தரணிகள் சங்க தேர்தலில் கஸ்ஸாலி ஹுசைன் போட்டி..
2025 ஆம் ஆண்டின் சட்டத்தரணிகள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் முன்வந்துள்ளார்.
40 வருடங்களுக்கு மேலான சட்டத்துறை அனுபவமுள்ள இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 11 வருடங்கள் பணிபுரிந்தவராவார்.
மேலும் வக்குப் சபையிலும் காஷி (Quazi) மேன்முறையீட்டு மன்றத்திலும் அங்கத்தவராகவும் சர்வதேச புலமைச் சொத்து ஆலோசனை சபை அங்கத்தவராகவும் பணிபுரிந்த இவர் மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கத்தவராகவும் பணிபுரிந்துள்ளார்.
சிவில் கிரிமினல் வழக்குகளில் ஈடுபாடு காட்டி வரும் கஸ்ஸாலி ஹுசைன் அவர்கள் கொழும்பிலும் கொழும்பின் வெளிப் பகுதிகளிலும் பல வழக்குகளை பேசி வருகின்றார்.இதேவேளை சட்டத்தரணிகள் சங்கத்தில் தீவிர அங்கத்தவரான இவர் அதன் செயற்குழு அங்கத்தவராகவும் பணி புரிந்துள்ளார் .
கொழும்பில் வசித்து வரும் இவர் 2025 ஆம் ஆண்டின் சட்டத்தரணிகள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முன்வந்துள்ளார்.