விளையாட்டு

புதிய ரி20 தரப்படுத்தலில் வனிந்து ஹசரங்க அசுர முன்னேற்றம்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான புதிய ரி20 தரவரிசைப் பட்டியலில் இலங்கை ரி20 அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க இரு இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தினை பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு கிரிக்கெட் தொடர்களின் முடிவிலும் புதிய வீரர்கள் தரப்படுத்தலை வெளியிடுவது வழமை. அந்தவகையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நிறைவுக்கு வந்திருக்க இத் தொடரை இலங்கை அணி 2:1 என கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட புதிய ரி20 பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியமையால் இரு இடங்கள் முன்னேறி 705 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தினை பிடித்துள்ளார். மற்றைய இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்சன தொடர்ந்தும் 3 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

இத் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் 726 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஆதில் ரஷீட் காணப்டுகின்றார். முன்னைய தரப்படுத்தல்களில் முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் ரஷீட்கான் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமையால் புதிய தரப்படுத்தலில் 13 ஆவது இடத்திற்கு பின்னோக்கியிருக்கிறார்.
இதேவேளை துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இந்தியாவின் சூரியக்குமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார். முன்னால் முதல் நிலை வீரர்களான பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளனர். இத் தரப்படுத்தலில் இலங்கை அணியின் பெத்தும் நிசங்க 584 புள்ளிகளுடன் 21ஆவது இடத்தில் உள்ளார். மேலும் குசல் மெண்டிஸ் 34ஆவது இடத்திலும், சரித் அசலங்க 37ஆவது இடத்திலும் பின்னோக்கியுள்ளனர்.

மேலும் சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் 256 புள்ளிகளுடன் பங்களாதேஷ் வீரர் சகீப் அல் ஹசன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை ரி20 அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க முன்னைய தரப்படுத்தலில் 8 ஆவது இடத்தில் இருந்திருக்க , ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியமையால் புதிய தரப்படுத்தலில் 7 இடங்கள் முன்னேறி 239 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். இத் தரப்படுத்தலில் 4ஆவது இடத்தில் முஹம்மத் நபியும், 6ஆவது இடத்தில் சிக்கந்தர் ராசாவும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *