கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் மகளிர் சங்க கருத்தரங்கு..
முஸ்லிம் மகளிர் தொழில்வல்லமை , மற்றும் வனிகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருந்தரங்கு ஞாயிற்றுக்கிழமை25 தெஹிவளை சம் சம் பவுன்டேசனின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் கொழும்பு பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழி கட்டுரைப் போட்டியில் வெற்றியீ்ட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன் இந் நிகழ்வு இவ் அமைப்பின் முன்னாள் தலைவி ஷானாஸ் ரவுப் ஹக்கீம் , ஆலோசகரும் முன்னாள் முஸ்லிம் மகளிர் கல்லுாாியின் அதிபர் பழீலா
ஜூரம்பதி, மற்றும் தற்போதைய தலைவி கரிமா சித்தீக் ஆகியேரினால் இந் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் குடும்ப பெண்கள் மற்றும் ஜக்கியம் என்ற தலைப்பில் பிரபல பேச்சாளர் வைத்தியகலாநிதி டொக்டர் ரைஸ் முஸ்தபா மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ் சேக் அர்க்கம் நுாரி ஆகியோர்கள் விரிவுரை நிகழ்த்தினார்கள் இந் நிகழ்வில் கொழும்பு வாழ் ஆங்கில மொழி மூல பாடசாலை மாணவிகளும் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(அஷ்ரப் ஏ சமத்)