கிழக்கு மாகாண காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை..
கிழக்கு மாகாணத்தில் யுத்தகாலத்திற்கு பின்னர் சட்டவிரோதமாக அரச காணிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான தீர்வினை பெற்று கொடுப்பதற்கு காணி அமைச்சருடனும் சட்டமா அதிபருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அரச செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.யுத்தத்தின் பின் கிழக்கு மாகாணத்தில் காணிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி இருந்தால் அது தொடர்பாக காணி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவாரணங்களை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் பிரதேச செயலாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அமைச்சர் இதனை தெரிவித்தார் .காணி தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு இருக்கும் சட்ட அதிகாரம் தொடர்பாக அமைச்சர் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கிழக்கு மாகாணத்தில் காணி பிரச்சினை மிக பாரதூரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.இக்கூட்டத்தில் காணி பிரதி அமைச்சர் அனுராதா ஜெயரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உட்பட பல பாராளுமனற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.