கல்பிட்டி ஐயூப் இல் கால் கோள் விழா..!
கல்பிட்டி ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் 2024ஆம் ஆண்டின் கால் கோள் விழா 22 ஆம் திகதி பாடசாலை அதிபர் எஸ். சியாவுல் ஹக் தலைமையில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின் படி 2024 ஆம் ஆண்டிற்கு தரம் 1 இற்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 22ஆம் திகதி இடம்பெற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதற்கமைய கல்பிட்டி ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் கால் கோள் விழா 22 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பித்திருந்தது. தரம் 1 இற்கு மொத்தம் 64 மாணவ மாணவியர் தெரிவாகியிருந்தனர். இவர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். பாதையின் இரு ஓரங்களிலும் தரம் 2 மாணவ மாணவியர் வரிசையாக நின்று மலர் தூவி புதிய மாணவ மாணவியர்களை வரவேற்றனர்.
பின்னர் தேசிய கீதம் மற்றும் பாடசாலைக் கீதம் இயற்றப்பட்டு தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளும் ஏற்றப்பட்டன. பின்னர் அனைவரும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட சிறப்பு அதீதிகளின் உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 64 புதிய மாணவர்கள் இரு வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் ஆசனங்களில் அமர்த்தப்பட்டனர்.
இக் கால் கோள் விழாவிற்கு கல்பிட்டி கல்விக் கோட்டத்தின் ஆசிரிய ஆலோசகர் மற்றும் இப் பிரதேச பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பெறும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)