நடுவரைச் சாடிய வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி தடை விதித்தது
இலங்கையின் இருபதுக்கு இருபது அணியின் தலைவரான வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இரு சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை விதித்ததுடன், போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதமும் அபராதம் விதித்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்ற 3ஆவதும், இறுதியுமான ரி20 போட்டியில் இடம்பெற்ற நோ போல் சர்சையால் அப் போட்டியில் கள நடுவராக இருந்த லின்டன் ஹனிபாலை ஊடக சந்திப்பில் கடுமையாகச் சாடினார் வனிந்து ஹசரங்க. அதில் லின்டன் ஹனிபால் சர்வதேச போட்டிகளில் நடுவராகச் செயற்பட தகுதி அற்றவர். அவர் வேறு தொழிலை பார்த்துச் செல்வது சிறந்தது என குறிப்பிட்டிருந்தார்.
இதன் விளைவாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவரின் தீர்பிற்கு பொதுவெளியில் விமர்ச்சித்த குற்றத்திற்காக இலங்கை அணியின் இருபதுக்கு இருபது தலைவரான வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இரு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்ததுடன் 3ஆவது போட்டியின் கட்டணத்திலிருந்து 50 சதவீதத்தினை அபராதமாக விதித்தது.
இதன் காரணமாக அடுத்த மாதம் 4ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் பங்களாதேஷ அணிக்கு எதிராக ஸைல்கட் மைதானத்தில் இடம்பெறவுள்ள முதல் இரு ரி20 போட்டிகளில் அணித்தலைவரான வனிந்து ஹசரங்க விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)