பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மர்ஹபா 24 ரமழான் விற்பனை நாளை..!
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லுாாியின் அதிபர் நஸ்ரியா முனாஸ் மற்றும் பழைய மாணவிகளின் உப தலைவி பெரோஸா முசம்மில் மற்றும் பழைய மாணவிகளது நிர்வாகக் குழு உறுப்பிணர்கள் இணைந்து “மர்ஹபா 24 ரமலான் முன் விற்பனை நிகழ்வுகள்” எதிர்வரும் 2024. பெப்ரவரி 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள எகஸ்பிசன் கொன்வன்சன் சென்டரில் (லேக் ஹவுஸ் எதிர்) விற்பனைகள் நடைபெறவுள்ளது. இந் விற்பனைக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை 24ஆம் திகதி காலை 09.மணி முதல் பி.ப 10.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இந் விற்பனையில் மற்றும் அனுமதிச் சீட்டில் கிடைக்கும் வருமானங்கள் கல்லுாாியின் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்க உள்ள புதிய கட்டிடத்திற்கான இவ் நிதி சேகரிக்கப்படுகின்றது. கடந்த 78 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டிடத்தினை அழித்து புதித்தாக நவீன வகுப்பறை, கூட்ட மண்டபம் போன்ற பல்வேறு பல்வகையான கட்டிடம் நிர்மாணிக்கப் பட உள்ளது.
இதற்காக கல்லுாாி அதிபர், பழைய மாணவிகள், கல்லுாாியின் அபிவிருத்திச் சங்க உறுப்பிணர்கள் மாணவிகள் இணைந்து இப் புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 10 ஆயிரத்திற்கும் அதிகமான பழைய மாணவிகள் கொண்ட இக் கல்லுாாியில் இந் நிகழ்வுக்கு பழைய மாணவிகள் அழைக்கப்படுகின்றனர் அத்துடன் இப் புதிய கட்டிட நிர்மாணத்திற்காக உதவும் படியும் அதிபர் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.
(அஷ்ரப் ஏ சமத்)