ஹனிபால் நடுவருக்குத் தகுதியற்றவர் வேறு வேலைக்கு முயற்சிக்கவும். திட்டித் தீர்த்த வனிந்து ஹசரங்க
லின்டன் ஹனிபால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராகச் செயற்பட தகுதியற்றவர். அவர் வேறு வேலையொன்றை பார்த்து செல்வது சிறந்தது என கடுமையாகச் சாடினார் இலங்கை ரி20 அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்த ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முழுமையாக இழந்திருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.
இதற்கமைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்னயித்த 210 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணிக்க விறுவிறுப்பான இறுதி ஓவரில் 3 பந்துகளுக்கு 11 ஓட்டங்கள் தேவையாய் இருக்க 4ஆவது பந்தை வபாடர் மொஹம்மட் கமிந்து மென்டிஸின் நெஞ்சுப் பகுதிக்கு வீச அதனை நடுவர் லின்டன் ஹனிபால் நோபோல் இல்லை என்று அறிவிக்க அப் போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் தோற்றுப் போனது.
இது தொடர்பில் போட்டியின் பின்னர் ஊடக சந்திப்பில் பங்கேற்ற இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நடுவராகச் செயற்பட்ட லின்டன் ஹனிபாவை கடுமையாகச் சாடினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து பேசுரகையில் சர்வதேச போட்டியில் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. அது இடுப்பு உயரத்திற்கு அருகில் இருந்திருந்தால், அது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு பந்து மிகவும் உயரமாக செல்கிறது, அது சற்று மேலே சென்றிருந்தால் அது பேட்ஸ்மேனின் தலையில் பட்டிருக்கும்.
நடுவராகிய உங்களால் பந்தை பார்க்க முடியவில்லை என்றால், அந்த நடுவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஏற்றவர் அல்ல. அவர் வேறு வேலை செய்தால் நன்றாக இருக்கும்.’ என்றார் கடும் தொணியில் இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க.
(அரபாத் பஹர்தீன்)