உள்நாடு

மருதமுனை அல் – ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் வித்யாரம்ப விழா

மருதமுனை அல் – ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் வித்யாரம்ப விழா நிகழ்வு இன்று (22.02.2023) பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.மஹ்றூப் தலைமையில் நடைபெற்றது.

இதில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். தரம் ஒன்று மாணவர்களின் முதல் நாளான இன்று பாடசாலைக்கு வருகை தந்த புதிய மாணவர்களை தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுடன் புதிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை இப்ப பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 16 மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் தரம் 5 இல் கல்வி கற்ற மாணவர்கள் நடத்தப்பட்ட ஸ்பெல் மாஸ்டர் (Spell Master) போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களும் இந்த நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். இதில்கல்முனை வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகன், பிரதி அதிபர் எம்.பி. அஹமட் ராஜி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் சுப்பர் சென்டர் உரிமையாளர் ஏ.எஸ்.எம்.அஸாம், புறகான்ஸ் (Burahan’s) சைக்கிள் கோணர் உரிமையாளர் எம்.ரி.அஹமட் பாஹிம் பாடசாலையின் அபிமானிகள் பலரும் கலந்து கொண்டனர்.
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *