உள்நாடு

பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம் – Public statement of ACJU

கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனியர்கள் அநியாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது.

2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இதுவரைக்கும் சுமார் 29,092 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளுமாவர் எனவும் சுமார் 69,028 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும் நம்பகமான ஊடகங்கள் தெரிவிக்கின்றன.1

அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக!

இவ்வாறான நெருக்கடியான நிலைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும்.

அந்தவகையில் தற்போது ஷஃபானுடைய மாதத்தை அடைந்திருக்கும் நாம் இம்மாதத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நல்லமல்களுக்குப் பின்னரும் குறிப்பாக பின்வரும் சந்தர்ப்பங்களிலும் பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

• 1445.05.06 (2023.11.21)ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மஹல்லாக்களிலும் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் குனூத்துன் நாஸிலாவை ஏதாவதொரு தொழுகையிலாவது தொடர்ந்தும் ஓதிவருதல்.

 

• ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின்னரும் தஹஜ்ஜுத், ழுஹா, வித்ர் போன்ற இதர நபிலான தொழுகைகளுக்குப் பின்னரும் பிரார்த்தித்தல்.

• ஸுன்னத்தான நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபடுதல்

• ஜுமுஆவுடைய இரண்டாவது குத்பாவில் பிரார்த்தித்தல்.

 • اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ

• اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ

• اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ

• اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

• اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர்- ஃபத்வா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

(ACJU ஊடகக்குழு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *