மருதமுனை அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா-2024
மருதமுனை கமு/கமு/அல்-ஹம்ரா வித்தியாலயம் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் வியாழக்கிழமை (22) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர்,கௌரவ அதிதிகளாக, மென்ஸ் வெயர் உரிமையாளர் ஏ.எம்.எச்.தஸ்மீம்,ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஏ.ஸஹறூன்,விசேட அதிதிகளாக முன்பள்ளி ஆசிரியர்களான ஏ.எம்.பாத்திமா ஹிஸாமா,சித்தி ஸாஹிறா,எம்.ஜே.ஜௌசின் றபீதா,விசேட அழைப்பாளர்களாக கல்வி அபிவிருத்தி குழு செயலாளரான பீ.எம்.நஸ்றுடீன்,பழைய மாணவர் சங்க தலைவர் எம்.என்.எம்.பதுர்தீன்,மாநகர சபை உறுப்பினரும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினருமான எம்.ஐ.எம்.றஜப்டீன்,பழைய மாணவர் சங்க செயலாளரான எம்.என்.எம்.வசீம்,பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக ,எம்.ஐ.எம்.நுபைறுடீன்,எஸ் அல்-ஸப்றி,ஏ.டபிள்யூ.ஸபீக் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தரம் இரண்டு மாணவர்களால் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டதுடன்
அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய அதேவேளை மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை வலயத்திற்கான வலய கீதம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
(நிஸா இஸ்மாயீல்)