மின் கட்டணம் விரைவில் குறையும்.
கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டண சதவீதத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்கும் யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும் எனவும் கடந்த ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதத்தில் அரச நிறுவனங்களின் மின்கட்டணம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படவுள்ளது.