விளையாட்டு

மிச்சல் மார்ஸின் சகலதுறை அசத்தலால் திரில் வெற்றி பெற்றது ஆஸி.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் மிச்சல் மாஸின் சகலதுரை அசத்தலால் இறுதிப் பந்தில் 6 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய தொடரின் முதல் ரி20 போட்டி இன்று இரவுப் போட்டியாக வெளிங்டனில் இடம்பெற்றிருந்தது

அப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து| அணிக்கு ஆரம்ப வீரர்களான பின் அலென் மற்றும் டெவேன் கான்வே ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருக்க பின் அலென் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த இளம் வீரரான ரச்சின் ரவீந்திர கான்வேயுடன் இணைந்து அதிரடி காட்ட இருவரும் அரைச்சதம் கடந்ததனர்.

இவ்விருவரும் தமக்கிடையில் 113 ஓட்டங்களை பெற்றுக் கொத்திருக்க ரவீந்திர 68 ஓட்டங்களுடனும் கான்வே 63 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்த 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மிச்சல் மார்ஸ், மிச்சல் ஸ்ராக் மற்றும் கமின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

216 ஆட்டங்கள் என்ற கடினமிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த அவுஸ்திரேலிய அணிக்கு முன்வரிசை வீரர்களான டேவிர் வோர்னர் (32), ஹெட் (24), மெக்ஸ்வெல் (25) மற்றும் இங்லிஸ் (20) என ஓட்டங்களை சேர்த்துக் கொடுத்தனர். இருப்பினும் அணித்தலைவரான மிச்சில் மார்ஸ் இறுதிவரை களத்திலிருந்து அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்று ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை விளாசிக் கொடுத்தார்.

அவருடன் 5ஆவது விக்கெட்டில் இணைந்த டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றதுடன், இறுதிப் பந்தில் 4 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவையாய் இருக்க டீம்  டேவிட் மிட்விக்கெட் திசையில் ஒரு 4 ஓட்டத்தை  விளாசி விட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலிய அணி திரில் வெற்றியைப் பதிவு செய்தது. இவ் வெற்றியால் தொடரை 1:0 என முன்னிலையுடன் ஆரம்பித்துள்ளது அவுஸ்திரேலியா.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *