உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியில் சமிந்த வாஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னால் வேகப்பந்து வீச்சாளரும், முன்னால் பயிற்றுவிப்பாளருமான சமிந்த வாஸ் தற்போதைய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தின் கட்டான தேர்தல் தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அத் தொகுதியின் அமைப்பாளர் பதவியும் அவருக்கு வழங்குவற்கும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *