பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு..!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) பெலவத்த ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது இலங்கை எதர்நோக்கிவருகின்ற சமூக பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கையின் தொழில்முயற்சித்துறை முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் மற்றும் மக்கள் சந்தித்துள்ள பொருளாதார சிரமங்கள் பற்றி விரிவாக உரையாடலுக்கு இலக்காக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியை தீர்த்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைசார் அணுகுமுறைகள் பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பொருளாதார அலுவல்கள் பற்றிய முதலாவது செயலாளர் மத்தியு வர்டின்ஹம் (Matthew Wordinghem), அரசியல் அலுவல்கள் பற்றிய இரண்டாவது செயலாளர் அலெக்ஸ் ஸ்மித் (Alex Smith) மற்றும் அரசியல் ஆலோசகர் நெலுனி திலகரத்ன (Neluni Thilakaratne) ஆகியோரும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.