உள்நாடு

அல் பத்ரியாவிற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

கஹடோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்திற்கு KPL பவுண்டேஷன் நிறுவனத்தால் விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்றைய தினம் கஹடோவிட பொது மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் கமர் , நஜ்ம் மற்றும் ஷம்ஸ் ஆகிய மூன்று இல்லங்களுக்கு மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மூன்று இல்லங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளுடன் இன்றைய முதல் நாள் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது.

இன்றைய கிரிக்கெட் போட்டி ஆரம் பிக்க முன்னர் KPL பவுண்டேஷன் சார்பாக பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரண தொகுதி ஒன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த நான்காம் தேதி நடைபெற்ற 13 வது KPL சுற்றுப்போட்டிகளுக்காக திரட்டிய பணத்திலிருந்து அண்ணளவாக 35000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை KPL பவுண்டேஷன் தலைவர் முபீன் மதனி அவர்கள் பாடசாலை அதிபர் ஏ.எம். எம். அஸ்மிர் அவர்களிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர் சாலிஹா மற்றும் ஆசிரியர்களான
ரம்சி அலி , ராம்சான் மற்றும் ரௌஷான் ஆகியோர்களுடன் KPL பவுண்டேஷன் சார்பாக சகோதரர் முபீன், இன்ஷார், பாசித் மற்றும் ஷாகிர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்பாக மர்ஹூம் ரிஸ்வி பவுண்டேஷன் சார்பாகவும் மைதானத்திற்கு தேவையான எல்லைக்கூம்புகள் அல் பத்ரியா நிர்வாகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

(அப்ஹம் நிஸாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *