உள்நாடு

“தற்போதுள்ள அரசாங்கத்தில் முன்னிறுத்தப்படுகின்ற எந்த ஒரு உறுப்பினரும் மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி ஒருவராக வர முடியாது..”        – கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு  மக்கள் வழங்குகின்ற ஆதரவு குறித்து அரசாங்கம் பல்வேறு கோணங்களில் பல ஆய்வுகளை   மேற்கொண்டு வருகின்றதாகவும்,  எவ்வாறான ஆய்வுகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும்   அரசாங்கத்திற்கு வெறும் 10 சதவீதத்திற்கும்  குறைவான  செல்வாக்கே மக்கள் மத்தியில்  காணப்படுகின்றதாகவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி மடவலையில் (16) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற திறப்பு விழாவொன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அதன் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்கு  பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்:

இன்று அரசாங்கத்தின் சார்பாக நாட்டின்  ஜனாதிபதி ஒன்றை மீண்டும் அமைக்க முடியாது என தெரிந்தும், அரசாங்க ஜனநாயகத்திற்கு முரணாக   தந்திரோபாய  வழிகள் மூலம்  சூட்சுமமான ஜனாதிபதியொன்றை அமைக்கும் திட்டமொன்று  இந்த அரசாங்கத்திடம் தற்போது இருந்துவருகின்ற தாக  சுட்டிக்காட்டிய  பாராளுமன்ற உறுப்பினர்,  இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றால்  அன்று  64 லட்சம் மக்கள் வாக்களித்து கோட்டாபயவை  இந்த நாட்டுக்கு கொண்டு வந்தனர்என்றும் அந்த   கோத்தபாய ராஜபக்சவை மக்கள் எவ்வாறு துரத்தினார்கல் என்பதும் புதிதல்ல, ஆகவே ,குளறுபடிகள் ஏற்படின்.  அது போன்று இந்த அரசாங்கத்தை விரட்டுவதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்பதை அரசு தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, அரசாங்கம் உடனே ஒரு ஜனநாயக வழிகளில் தேர்தலை நடத்துவது  காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என வலியுறுத்தினார்.

இந்த நாட்டிலே ஜனாதிபதிகள் வருவதும் வாக்குறுதிகள் அளிப்பதும் ஒன்றும்பு திதானதல்ல இந்த வாக்குறுதியை ஜனாதிபதி தேர்தல் முடிந்து அடுத்த நாளே காற்றிலே பறந்து விடுவதும் புதிதானது அல்லரணில் விக்கிரமசிங்க என்பவர் யார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் 2015 இல் இருந்து 2019 வரை காலப்பகுதியிலே நாங்கள் அவருடன்  இருந்திருக்கின்றோம்.  ஆகவே அந்த வாக்குறுதிகள் எல்லாம் மக்கள் நம்புவதற்கு  இல்லை என்பது கீழ்மட்டத்தில்  மக்களுடன்  இருக்கும் எங்களுக்கு நன்றாக தெரியும்

நாட்டுக்கு அவசியமான சிறந்த  பொருளாதார கொள்கை திட்டம் சஜித் பிரேமதாச தலைமையிலானஐக்கிய மக்கள் சக்தி   கட்சி யிடமே உள்ளதாக குறிப்பிட்டார். ஆதலால்  நாட்டு  மக்களின் பால் பொறுப்புணர்ச்சி உள்ள மக்களின் நலனில் அக்கறையுள்ள நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப,  பொதுமக்கள் விழிப்புடன்  செயல்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்    ஒரு காலத்தில் அரசியலில் இருந்தார் என்பதற்காகவோ அல்லது, அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவோ இல்லாமல்   தற்போது அவர் செய்கின்றனர் என்பதை கண்காணித்து வாக்களியுங்கள். அப்போதுதான் நாட்டின் சுபிட்சத்தை  ஏற்படுத்த முடியும் 

இன்று நாட்டில் இருப்பது மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு அரசாங்கம் அது ஒரு   தலைகீழான அரசாங்கமாக இருக்கின்றது அதாவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்க உள்ள அரசாங்கமாக  ஆகவே, மக்களால் வாக்களித்து தெரிவு செய்யும் ஒரு அரசாங்கத்தை உருவாக்கி மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

 

( எம்.ஏ.அமீனுல்லா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *