சதீர மற்றும் மெத்யூஸின் அதிரடியால் ஆப்கானுக்கு 188 ஓட்டங்கள் இலக்கு.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தீர்மானமிக்க 2ஆவது ரி20 போட்டியில் சதீர சமரவிக்ரமவின் அரைச்சதம் மற்றும் அனுபவ வீரரான அஞ்சலோ மெத்யூஸ் அதிரடித் துடுப்பாட்டம் என்பன கை கொடுக்க ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 ஓட்டங்களை அhற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று மாலை 7 மணிக்கு தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தது.
இதற்கமைய களம் நுழைந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களில் பெதும் நிசங்க (25) , குசல் மென்டிஸ் (23), தனஞ்சய டி சில்வா (14), வனிந்து ஹசரங்க (22) என அணியின் ஓட்டக் குவிப்பில் துணைநிற்க 4ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம அசத்தல் அரைச் சதம் கடந்து 51 ஓட்டங்களுடன் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆட்டமிழக்காமல் மறுபுறமிருந்த அனுபவ வீரரான அஞ்சலோ மெத்யூஸ் 22 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 42 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றி பெற 188 ஓட்டங்கள் இலக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)