உள்நாடு

கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் இடம்பெற்ற கலாநிதி ஏ. எம். எம். அஸீஸ் அவர்களின் நினைவு தினப்பேச்சு..!

கல்வியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், சமூக சேவையாளரும் செனட்டரும் கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் முன்னாள் அதிபருமான கலாநிதி அஸீஸ் அவர்களின் 50 வது நினைவு தினப்பேச்சு இன்று (17) கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் கபூர் மண்டபத்தில் அஸீஸ் மன்றத்தின் தலைவர் காலித் பாருக் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலாநிதி அஸீஸ் அவர்கள் பற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்டக் கல்வியலாளர் பேராசிரியர் எம்.செர்னராஜா பிரதான உரையாற்றினார்

அத்துடன் கெப்டன் பொறியியிலாளர் ஏ.ஜி.ஏ பாரி சர்வதேச திட்டத்தின் ஆலோசகர், மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மற்றும் அரப் நியூஸ் ஆங்கில மொழி சிரேஸ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல் டீன், வை.எம்.எம். ஏ தலைவர் இஹ்சான் ஏ ஹமீட், வை.எம்.எம்.ஏ முன்னாள் தலைவர் சஹிட் எம். றிஸ்மி ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வில் சிங்கள மொழிமூலத்தில் சிங்கள முஸ்லிம் ஒற்றுமை பற்றிய நுாலை நுாலாசிரியர் தேசமான்ய எம்.டி.டி. பீரிஸ் அவர்கள் பேராசிரியர் செர்னராஜாவிடம் கையளித்தார். அத்துடன் அஸீஸ் பற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதிய நுாலை செனட்டர் கலாநிதி அஸீஸின் மகன் முஹம்மது அலி அஸீஸ் பிரதம பேச்சாளர் சொ்னராஜாவிடம் கையளித்தார்.

அஸீஸ் பற்றி பேராசிரியா் சொ்னராஜா உரையாற்றுகையில்,

கலாநிதி அஸீஸ் தமிழ் முஸ்லிம்களுக்கு தலைவராக செயல்பட்டவர்களில் ஒருவர். அவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தந்தை யாழ்ப்பாண நகர சபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம்/ வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம்/இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். 1929 இல் இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார். 1933 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு தொடர்வதற்காக இங்கிலாந்து சென்றார்.

அஸீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார். மேலும் கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராக பணியாற்றினார்.

1950 மற்றும் 1960 களில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார். அவர் எழுதிய நூல்கள் இலங்கையில் இஸ்லாம், அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, மிஸ்ரின் வசியம், கிழக்காபிரிக்கக் காட்சிகள், ஆபிரிக்க அனுபவங்கள்-தமிழ் யாத்திரை ஆகிய நுால்களை எழுதியுள்ளார் என பேராசிரியர் உரையாற்றினார்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *