இலங்கை எதிர் ஆப்கான் முதல் ரி20 இன்று..!
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் இன்றைய தினம் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் ஆரம்பிக்கின்றது. இப் போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் தம்புள்ள ரங்கிரி மைதானம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன் இலங்கை கிரிக்கெட் மைதானங்களில் எல்லீடி விளக்குகள் பொருத்தப்பட்ட முதல் மைதானம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
அத்துடன் வனிந்து ஹசரங்க தலைமை தாங்கும் இலங்கை அணியில் இன்று குசல் ஜனித் பெரேரா ஆரம்ப வீரராக களம்கானுவார் என எதிர்பார்க்கலாம். அத்துடன் மதீஷ பத்திரன மற்றும் அணித்தலைவரான வனிந்து ஹசரங்க ஆகியோரின் பந்துவீச்சு இலங்கைக்கு கைகொடுக்கும்.
அத்துடன் ஆப்கான் அணியைப் பொறுத்த மட்டில் ரஷீத்கான் மற்றும் முஜிபுர் ரகுமான் இல்லாமை அணியின் மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். இருப்பினும் அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் மற்றும் முஹம்மத் நபி ஆகியோரின் சகலதுறை ஆட்டம் அவ் அணியின் பலம் எனலாம். மேலும் முன்வரிசை வீரர்களான அணித்தலைவர் இப்ராஹிம் சத்ரான் ம்ற்றும் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோரின் துடுப்பாட்டம் ஆப்கான் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும்.
மேலும் இவ் விரு அடிகளும் இதுவரையில் 4 ரி20 போட்டிகளில் மோதியிருக்க அதில் இலங்கை அணி 3 வெற்றிகளையும் , ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. அத்துடன் இறுதியாக இடம்பெற்ற போட்டியில் ஆப்கானித்தான் அணி இலங்கை அணியை 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)