விளையாட்டு

கண்டல்குடா மு.வித்தியாலயத்தின் மரதன் போட்டியில் பஹீஜ் முதலிடம்

கல்பிட்டி கோட்டக் கல்விக் காரியாலயத்திற்கு உட்பட்ட கண்டல்குடா முஸ்லீம் வித்தியாலயத்தின் நடப்பு ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வீதியோர ஓட்ட நிகழ்ச்சியுடன் (மரதன்) கோலாகலமாக ஆரம்பித்தது.

கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தற்சமயம் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்றுவரும் இக் கால கட்டத்தில் புத்தளம் கல்வி வலயத்தின் கல்பிட்டி கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட தரம் 11 வரையான ககுப்புக்களைக் கொண்ட கண்டல்குடா முஸ்லீம் வித்தியாலயத்தின் நடப்பாண்டின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (16) ஆரம்பமாகின.

அதற்கமைய இப் பாடசாலையின் மாணவர்கள் நட்சத்திரம் (STAR ), பிறை (CRESENT) ஆகிய இரு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு இன்றைய தினம் ஆரம்ப நிகழ்ச்சியாக வீதியோட்டம் (மரதன்) போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது. இப் போட்டியில் சாதாரன தரத்தில் கற்விகற்கும் பாஸர் முஹம்மது பஹீஜ் முதலிடம் பிடித்துடன் இரண்டாம் மற்றும் 3ஆம் இடங்களை பஸ்கான் மற்றும் பர்விஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *