கப்சோவினால் பால் மா பொதிகள் வழங்கி வைப்பு..!
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட சம்மாந்துறை கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள கல்லரிச்சல் கிராம சேவையாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாய்மாருக்கான பால் மா பொதிகள் வழங்கும் நிகழ்வு கப்சோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நேற்று(12) அல் – அஸ்ஹர் பாடசாலையில் கிராம சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.எம் பரீது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களும் கெளரவ அதிதிகளாக கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் எ.ஜே காமில் இம்டாட் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு பொறுப்பான தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாறுடீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது கிராம சேவையாளர் பிரிவுகளான கல்லரிச்சல் 01, கல்லரிச்சல் 02 மற்றும் கல்லரிச்சல் 03 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 180 குடும்பங்களுக்கு இப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 900 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம், ஏ.கே ஹஸான் அஹமட்)