உள்நாடு

பேருவளை பாஸியதுன் நஸ்ரியா வித்தியாலயத்தின் 100வது ஆண்டு விழா..!

பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் நினைவு முத்திரையொன்று வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி (18-2-2024) பாடசாலை மண்டபத்தில் அதிபர் மஸ்னவியா ரிப்கான் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளன.

போக்குவருத்து, ஊடகத்துறை மற்றும் தபால் தொடர்புகள் அமைச்சர் பந்துல குணவர்தன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேல்மாகாண தமிழ் மொழி பிரிவு கல்விப் பணிப்பாளர் முஹம்மத் நஜீப், பேருவளை பிரதேச செயலாளர் ரன்ஜன் பீ பெரேரா, களுத்துறை கல்வி பணிப்பாளர் அஜித் விக்ரம ஆராச்சி ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குபற்றுவர்.

களுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ். ஜயகுமார் பேருவளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் டப்லியு.ஏ.ஜே.யு சோம ரத்ன, களுத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம் இல்யாஸ், தபால் திணைக்கள களுத்தறை பிரதேச அதிகாரி பீ.டி கே ரேம ரத்ன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் களுந்து கொள்வர்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியான இப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.பாஹிம் ஹாஜியார் தெரிவித்தார்.

ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டுடன் பெண் ஆளுமைகளை கௌரவித்தல், நடை பவணி,விளையாட்டுப் போட்டி, பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டி,களியாட்ட நிகழ்வு மற்றும் கலை,கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெறும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் அரசியல்வாதிகள்,கல்வி அதிகாரிகள்,உலமாக்கள்,பிரமுகர்கள்,பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்களித்த பரோபகாரிகள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,முன்னால் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்வர்.

நூற்றாண்டு விழாவினை மிக விமர்சையாக கொண்டாட பரவலான ஏற்பாடுகளை பாடசாலை சமூகம் செய்து வருகிறது.

 

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *