உள்நாடு

சாய்ந்தமருது GMMS ல் பிரமாண்டமாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு..

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) ” எமேஜிங் ட்லெண்ட்  – 2024″  எனும் தொனிப்பொருளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (10) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் பெற்றோர்களின் பிரமாண்டமான ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர்  எம்.ஐ.எம். இல்லியாஸ்  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
பாரம்பரியக் கலையான சாய்ந்தமருதில் பிரபல்யம் பெற்று விளங்கும் எம்.ஐ. அலாவுதீன் தலைமையிலான முஹம்மதிய்யா கலை மன்ற பொல்லடிக் குழுவினரால் அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டதோடு, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபிர் (நிர்வாகம்) , திருமதி எம்.எச். றியாஸா (முகாமைத்துவம்) மற்றும் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் உடற்கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.எம். சாஜித் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் ஆரம்ப கல்விக்கான வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் உட்பட பிரதேசப் பாடசாலைகளின்  அதிபர்கள்,  ஓ.ஜீ – சொஸஐட்டியின் தலைவர் மற்றும் செயலாளர், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகப் பதவியேற்ற பின் திருமதி சுஜாதா  குலேந்திர குமார் அவர்கள், அம்பாறை மாவட்டத்தில் முதல் நிகழ்வாக கலந்து கொண்டது இப்பாடசாலையின் நிகழ்வாகும்.
இதன்போது, அதிபர், பிரதி, உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தங்களை அர்ப்பணித்துவரும் அபிவிருத்தி உறுப்பினர்களும் ஆகியோர்களது  அயராத சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
இம்முறை (2023) இப் பாடசாலையில் (GMMS) இருந்து சுமார் இரு தசாப்தங்களின்  பின்னர் 22 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ள அதேவேளை, 70 புள்ளிகளுக்கு மேல் 91 சதவீத சித்தியைப் பெற்று தரப்படுத்தலில் சாய்ந்தமருது கோட்டத்தில் முதன்மை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது .
இச் சாதனை மாணவர்களை வாழ்த்தி, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் திருமதி கே.எம். ராபீக், உதவி அதிபர் எம்.ஏ.சீ.எல். நஜீம், உட்பட வகுப்பாசிரியர்களான எம்.சீ. ஜாபீர், திருமதி முபீதா இஸ்மத், திருமதி தஸ்லீமா தௌபீக்கார் மற்றும் திருமதி எம்.எஸ்.எம். றிஸ்பியா ஆகியோருக்கும் முதன்மைநிலை 1, 2 பகுதித் தலைவர்கள் வகுப்பாசிரியர்கள்; ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *