உள்நாடு

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் பாராட்டு விழா..

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2022 மற்றும் 2023 ல் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் பாராட்டு விழா புத்தளம் நகர மண்டபத்தில் புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஷவ்வாப் றிபாயிஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் கௌரவ அதிதிகளாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மேலாண்மை கற்கைகள் பேராசிரியர் வி.சிவலோகதாசன், புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம் அனீஸ், புத்தளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம் அஸ்மில், இமாரா மென்பொருள் சொல்யூசன் தனியார் நிறுவன தலைமை அதிகாரி எம்.எப் றின்ஷாத் அஹமட், தரப்படுத்தல் மின் பொறியியல் எரிசக்தி ஆலோசகர் எஸ்.எம்.எம் றிஃபாய், எல்.சி.சி.ஐ இன் வருவாய் பகுதி மேலாளர் மற்றும் இலங்கை ரேடிசன் ஹோட்டல் குழுவின் இட ஒதுக்கீட்டாளர் மொஹமட் ஷாஹிக் மற்றும் கொழும்பு அசோசியேட்ஸ் நிறுவன இயக்குனரும் சர்வதேச சட்டத்தரணி கள் சங்கத்தின் இளம் வழக்கறிஞர்கள் குழுவின் தேசிய பிரதிநிதியுமான திருமதி அஜ்ரா அசார் ஆகியோருடன் புத்தளம் வலய பாடசாலைகளின் அதிபர்கள் இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், தொண்டர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

புத்தளத்தில் கல்வியும் ஒழுக்கமும் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்ப கடந்த மூன்று வருடங்களாக கடுமையாக உழைத்து வரும் இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் முயற்சியினால் இவ்விழாவில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருது வழங்கி கௌரவித்து புத்தளம் கல்வி வலயத்தில் தமிழ் பேசும் இளம்கலை மாணவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் சங்கமாகவும் புத்தளம் இலங்கை பட்டதாரிகள் சங்கம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

சிறந்த பெறுபேறுகளை பெற பாடுபட்ட புதிய மாணவர்களின் முயற்சிகளை பாராட்டுவதுடன் ஏனைய மாணவர்களின் கல்வி திறனை வெளிப்படுத்த ஊக்குப்பதை நோக்காக கொண்டு இடம்பெற்ற இவ் விழாவில் புதிய இளங்கலை பட்டதாரிகளுக்கு உயர்கல்வியை தேடுவதன் முக்கியதுவம் மற்றும் சிறந்த பட்டதாரிகளாக எவ்வாறு உருவாக்குவது பற்றிய முன் அறிவு அத்தோடு இலங்கை பல்கலைக்கழக அமைப்பு பற்றிய தெளிவான பார்வையும் வழங்கப்பட்டமை இந்நிகழ்வின் விஷேட அம்சமாகும்.

 

 

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *