கலாநிதி ஏ எம் ஏ அஸீஸ் ஞாபகார்த்த உரை பெப்ரவரி 17ல்..
கலாநிதி ஏ. எம். ஏ. அசீஸ் , என அழைக்கப்பட்ட அபூபக்கர் முஹம்மது அப்துல் அஸீஸ் அக்டோபர் 4, 1911 – நவம்பர் 24, 1973) கல்வியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், சமூக சேவையாளர் ஆவார்.
கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் அசீஸ் ஞாபகார்த்த உரை பெப்ரவரி சனிக்கிழமை 17ஆம் திகதி 2024 காலை 09.45 மணிக்கு கொழும்பு சாஹிரா கல்லூரியில் கபூர் மண்டபத்தில் அசீஸ் மன்றத்தின் தலைவர் காலித் பாருக் மற்றும் வை.எம்.எம். ஏ தலைவர் இஹஸான் ஹமீட் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கலாநிதி அஸீஸ் அவர்கள் பற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்ட கல்வியலாளர் பேராசிரியர் எம்.செர்னராஜா பிரதான உரையாற்ற உள்ளார் . பேராசிரியர் செர்னராஜா அவர்கள் சிலோன் பல்கலைக்கழகம், சட்ட பட்டதாரி முதலாம் நிலை, பட்டம் பெற்றவர். அவர் சட்டக் கல்லூரி விரிவுரையாளர் அதன் பின்னர் சட்ட முதுமானி எல் எல்.எம். அமெரிக்க பல்கலைக்கழகம், பி.எச்.டி.லண்டன் கிங்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தில் மேலும் சட்டம் பற்றி பயின்றார். மற்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், சர்வதேச சட்டங்கள் பற்றிய நூல்களை எழுதினார். 1986 களில் சிங்கப்பூரில் குடிபெயர்ந்து சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ளார் அத்துடன் கனடா ,.அமெரிக்கா, பிரேசில் , சீனா, இந்தியா, போன்ற சர்வதேச நாடுகளில் சட்ட விரிவுரை ஆய்வுகளை கருத்தரங்குகள் ஆராய்ச்சி வருகை தரு விரிவுரையாளராகவும் சேவையாறறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
.அத்துடன் கெப்டன் பொறியியிலாளர் ஏ.ஜி.ஏ பாரி சர்வதேச திட்டத்தின் ஆலோசகர், மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மற்றும் அரப் நியூஸ் ஆங்கில மொழி சிரேஸ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல் டீன் ஆகியோர்களும் கலாநிதி அசிஸ் பற்றி உரையாற்றுவார்கள்.
அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியார் என்பவருக்கும் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண நகர சபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். 1929 இல் இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார்.1933 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு தொடர்வதற்காக இங்கிலாந்து சென்றார். உயர் கல்வியை மேல் படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார். உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மரீனா சுல்பிக்கா, முகம்மது அலி, இக்பால் ஆகியோர் பிள்ளைகள் உள்ளனர்
அசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராக பணியாற்றினார்.
1950 மற்றும் 1960களில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தவர். அவர் எழுதிய நூல்கள் இலங்கையில் இஸ்லாம், அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, மிஸ்ரின் வசியம். கிழக்காபிரிக்கக் காட்சிகள் ,ஆபிரிக்க அனுபவங்கள்தமிழ் யாத்திரை .ஆகிய நுால்களை எழுதியுள்ளார்.
காலம் சென்ற கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் கலாநிதி அசீஸ் பற்றி நுால்களையும் எழுதியுள்ளார் அத்துடன் ஒவ்வொரு வருடமும் அசீஸ் பற்றிய பேச்சுக்களும் நுால் உறுவில் வெளிவந்துள்ளது. இந்த நாட்டின் கல்வி, நிர்வாகம்,. சமுக சேவை அரசியல் பணிகளில் தொன்டாற்றிய முஸ்லிம் தலைவர் செனட்டர் கலாநிதி ஏ.எமி. அசீஸ் நினைவு தினத்தில் கலந்து சிறப்பிக்குமாறு அசீஸ் மன்றம் நலன் விரும்பிகள் , அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
(அஷ்ரப் ஏ சமத்)