உள்நாடு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 42வது பூர்த்தியையொட்டி பல்வேறு ஊடக செயற்பாடுகள்

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் 42 ஆவது வருட நிகழ்வு பெப்ரவரி 14 நள்ளிரவில் பௌத்த மத பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி 43வது ஆண்டு விழா நிகழ்வுகள் நேரடியாக தொலைக்காட்சியில் நடைபெறும். இந் நிகழ்வின்போது லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படும் அத்துடன் இலங்கை ரூபவாஹினி, நேத்ரா , ஜ சனல் ஆகிய மூவ் அலைவரிசையிலும் வெப்தளம் ஊடாக ரேடியோ நேரடி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படும். என இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தபானத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

ரூபவாஹினி 42வது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு ரூபவாஹினி கூட்டுத்தாபணத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். இம் மாநாட்டின்போது கபில தசநாயக்க பிரதிப் பணிப்பாளர், சதிஸ் நீலகண்டன் சந்தைப்படுத்தல் முகாமையாளரும் கலந்து கொண்டனர்.

இங்கு மேலும் கூட்டுத்தபாணத்தின் தலைவர் தகவல் தருகையில்,
லேக் ஹவுஸ் விளம்பர பீடம் பத்திரிகையில் விளம்பரமெடுக்கும்போது சிறிய கிட் விளம்பரம் கூட தொலைக்காட்சியில் நிகழ்நிகழ்ச்சிகள் திரையிடும் போது கீழ் எழுத்துவடிவில் அல்லது படத்துடன் விளம்பரங்களை காட்சிப்படுத்த விரும்பினால் அதற்கான விளம்பரங்களையும் லேக் ஹவுஸ் நிறுவனம் அதற்கான கட்டனத்தினை அறவிட்டு ரூபாவாஹினிக்கு அனுப்ப்பட்டு அவைகள் தொலைக்காட்சியின் அடி எழுத்தில் விளம்பரப்படுத்தக் கூடிய வசதிகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் சகல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வெப் ரேடியோ ஊடாகவும் ஒலிபரப்படும்.

நேத்ரா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கொழும்பில் நடைபெறும் இசை, கலை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்படும். அத்துடன் எதிர் காலத்தில் வட கிழக்கு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு சில நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்படும். அத்துடன் எதிர்வரும் நோன்பு காலத்தில் நோன்பு நிகழ்வுகளையும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் ஒளிபரப்படும்.

அத்துடன் ரூபவாஹினி பிரிலான்ஸ் எனனும் நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் 04.30க்கு ஒளிப்பரப்படுகின்றது. இந் நிகழ்ச்சியான தொழில் பயிற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தொலைக்காட்சி ஊடாக நிகழ்ச்சிகளை நடாத்தி கிராமங்களில் உள்ள இளைஞா்கள் பாடசாலை விட்டு விலகிய மாணவர்களை பதிவு செய்து அவர்கள் மரவேலையாளர் இ மின்னியல் இணைப்பாளர் போன்ற பயிற்சியளித்து அவர்களை என்.வி.கியு 3 சான்றிதழ் உடன் அவர்களை தொழிற்பயிற்சித்துறையில் பயிற்சியளித்துள்ளது. இதுவரை 44ஆயிரம் இளைஞர்கள் நன்மையடைந்துள்ளனர் சிலர் இத்துறையில் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

அத்துடன் நடுத்தர வியாபாரிகளை இனம் கண்டு அவர்களை நேரடியாக பேட்டி கண்டு அவர்களது தொழிற்சாலைகள் பயிற்சிகளை யும் ஊடககமளிதத்து சிறிய முகாமைத்துவ தொழில் வல்லுனர் (எஸ்.எம். ஈ) ஊடாக அவர்களையும் இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணம் பயிற்சியளித்து மக்களுக்குத் தேவையான பிரயோசனமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. அத்துடன் தற்பொழுது அரசாங்க செய்திகள் மட்டுமல்லாது எதிர்கட்சி நிகழ்ச்சிகள் ஆரப்பாட்டங்கள் கொண்ட நடுநிலையான செய்திகளை ஒலி ஒளிபரப்பபடுகின்றது

கடந்த காலங்களில் கிறிக்கெட் விளையாட்டிலும் கூடுதலான கேள்வியுள்ளதாள் அதனை எமது நிறுவனத்திற்கு கிடைக்காமல் உள்ளது எனவும் கிறிக்கெட் சபை கூடுதலான கேள்வி உள்ளவர்களுக்கே கிறிக்கெட் நேரடி ஒலிபரப்பினை வழங்குகின்றது. இதனால் எமது நிலையத்திற்கு அவைகள் கிடைப்பதில்லை எனவும் தலைவர் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்தார்.  (அ)

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *