சென் பீட்டர்ஸ் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸால் வென்றது ரோயல் கல்லூரி
19 வயதிற்குட்பட்ட பிரிவு 1 பாடசாலைகளுக்கு இடையிலான தொடரின் கொழும்பு சென் பீட்டர்ஸ் கல்லூரிக்கு எதிராக போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 61 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது கொழும்பு ரோயல் கல்லூரி.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பிரிவு 1 பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஒரு அங்கமாக கொழும்பு ரோயல் கல்லூரி அணிக்கும்இ கொழும்பு சென் பீட்டர்ஸ் அணிக்கும் இடையில் ரோயல் கல்லூரி மைதானத்தில் 9ஆம மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென் பீட்டர்ஸ் கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணிக்கு யசிண்டு மற்றும் இசுல ஆகியோர் சதம் விளாசிக் கொடுக்க ரோயல் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. யசிண்டு ஆட்டமிழக்காமல் 152 ஓட்டங்களையும் இ இசுல 122 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சென் பீட்டர்ஸ் கல்லூரி அணிக்கு ரோயல் கல்லூரி பந்துவீச்சாளர்கள் பெறும் இடையூரைக் கொடுக்க சென் பீட்டர்ஸ் கல்லூரி 190 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அசடிச 77, சவி 46 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் சினேத் 6 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
முதல் இன்னிங்சில் ரோயல் கல்லூரியை விட 174 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தமையால் பளோஓன் முறையில் 2ஆவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாட சென் பீட்டர்ஸ் கல்லூரிக்கு வாய்ப்பை கொடுத்தது ரோயல் கல்லூரி. இறுதி நாளான நேற்று (10) தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென் பீட்டர்ஸ் கல்லூரி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள ரோயல் கல்லூரி அணி 24 வருடத்தின் பின்னர் சென் பீட்டர்ஸ் கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 61 ஓட்டங்களால் வீழ்த்தி அசத்தியது. துடுப்பாட்டத்தில் அசடிச 34 ஓட்டங்களைப் பெற இ ரோயல் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் யனுல 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது. (அ)
(அரபாத் பஹர்தீன்)