Uncategorizedவிளையாட்டு

18ஆவது ஆசிய உதைப்பந்தாட்டத் தொடர். சம்பியனான நடப்புச் சம்பியன் கத்தார்

18ஆவது ஆகியக் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் பலமிக்க ஜோர்தான் அணியை அக்ரம் ஆபீபின் ஹெட்றின் கோல்களின் உதவியுடன் 3:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்புச் சம்பியனான கத்தார் தொடரான 2ஆவது முறையும் சம்பியன் மகுடத்தை முத்தமிட்டு அசத்தியதுடன், ஆசியாவின் உதைப்பந்தாட்ட வல்லரசாக மாறியுள்ளது.

18ஆவது ஆசியக் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் தீர்மாணமிக்க இறுதிப் போட்டி நேற்று (10) இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடப்புச் சம்பியனும், போட்டிகளை நடாத்தும் கத்தார் மற்றும் ஜோர்தான் அணிகளுக்கிடையில், லுசாலி உதைப்பந்தாட்ட அரங்கில் ஆரம்பித்தது. ஆரம்பிக்க முன்னரே மைதானம் ரசிகர்களால் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர். இதனால் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் பந்துடன் ஜோர்தான் கோல் கம்பம் நுழைந்த கத்தார் முன்கள வீரரை ஜோர்தான் வீரரான ஒல்வன் தள்ளிவிட பெனால்டி உதைக்கான வாய்ப்பு கத்தாருக்கு கிடைத்தது. அதனை கம்பத்தின் வலப்புறம் உள்ளனுப்பிய அக்ரம் ஆபீப் 1:0 என முதல் பாதியில் கத்தாரை முன்னிலைப்படுத்தினார்

பின்னர் ஆரம்பித்த தீர்மாணமிக்க 2ஆவது பாதி ஆட்டத்தில் ஜேர்தான் வீரர்கள் ஆக்ரோசம் காட்டினர். இதனால் ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் ஹடாட் கொடுத்த நேர்த்தியான பந்துப் பரிமாற்றத்தை அல் நைமட் கம்பத்தினுள் செலுத்தி போட்டியை 1:1 என சமன் செய்தார். இருப்பினும் அடுத்த 4ஆவது நிமிடத்தில் கத்தார் அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி உதை கிடைக்க அதனையும் அக்ரம் ஆபீப் கம்பத்தினுள் செலுத்த 2:1 என மீண்டும் முனனிலை பெற்றது நடப்புச் சம்பியன் கத்தார்.

மேலும் தொடர்ந்த ஆட்டத்தில் கத்தாரின் கோலுக்கு பதிலடி கொடுக்க பெரிதும் போராடியது ஜோர்தான் அணி. இருப்பினும் ஆட்டத்தின் மேலதீக நேரமான 95ஆவது நிமிடத்தில் பந்துடன் தனி ஆளாய் ஜோர்தான் பெனால்டி எல்லைக்குள் நுழைந்த அக்ரம் ஆபீபை ஜோர்தான் கோல்காப்பாளர் வேண்டுமென்று தள்ளி விட மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கத்தாருக்குக் கிடைத்தது. அதனை இடப்புறமாக கோல் கம்பத்தினுள் அக்ரம் ஆபீப் உள்ளனுப்ப கத்தாரினதும் அக்ரம் ஆபீபினதும் ஹெட்ரிக் கோலாக மாறியதுடன் போட்டி முடிவில் 3:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஜோர்தானை வீழ்த்திய நடப்புச் சம்பியனான கத்தார் மீண்டும் சம்பியன் மகுடத்தை கரம் ஏந்தி அசத்தியது.

இப் 18ஆவது ஆசியக் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை உட்செலுத்திய வீரர்கள் வரிசையில் கத்தாரின் நட்சத்திர வீரரான அக்ரம் ஆபீப் முதலிடதம் பிடித்தார. இத் தொடரின் இறுதிப் போட்டியில் ஹெட்ரிக் கோலினைப் பதிவு செய்ததன் மூலம் மொத்தமாக 9 கோல்களை உட்செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் தொடரின் பெறுமதிமிக்க வீரருக்கான விருது அத்துடன் இத் தொடரின் சிறந்த வீரருக்கான விருது ஆகிய இரண்டையும் அக்ரம் ஆபீப் தனதாக்கினார். மேலும் இத் தொடரின் சிறந்த அணிக்கான வருதும் கத்தார் அணிக்கு வழங்கப்பட்டதுடன் இப் 18ஆவது ஆசியக்கிண்ணத் தொடரின் சிறந்த கோல்காப்பாளருக்கான விருதினை கத்தார் அணியின் கோல்காப்பாளரான மிஸ்ஸல் பர்ஸ்லாம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  (அ)

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *