உள்நாடு

உக்குவளை அஹதிய்யா பாடசாலையில் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கிரியைகளுக்கான பயிற்சிப்பட்டறை..

“அஹதிய்யா பாடசாலைக் கல்வி மாணவர்களை நல்வழியில் வாழ வழியமைக்கிறது..” என்று உக்குவளை அஹதிய்யா பாடசாலை அதிபரும் முன்னாள் பிரதி அதிபருமான ஹாஜி எம் ஹலீம்தீன் தெரிவித்தார்.

உக்குவளை அஹதிய்யா பாடசாலை அதிபர் ஹாஜி எம்.ஹலீம்தீனின் ஏற்பாட்டில் மாணவ மாணவியர்கள் ‘வுழூச் செய்தலுடன் ஐவேளை தொழுகைகளை எவ்வாறு நிறைவேற்றுவது’ என்பது பற்றிய பயிற்சி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் உக்குவளை அஜ்மீர் முன்றலில் நடாத்தப்பட்டது. இதன்போது  அவர்களை அறிவூட்டும்வகையிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அஹதிய்யா ஆசிரிய ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்..,
“ஞாயிறு தோறும் காலை 8 மணிமுதல் 12 மணிவரை சுமார் நான்கு மணிநேரம் வரை நடாத்தப்பட்டுவரும் இந்த அஹதிய்யா பாடசாலையில் மாணவராகளாகிய நீங்கள்  சன்மார்க்க விபரங்களை நன்கு கற்று செயலாற்றவேண்டும்.  எமது இஸ்லாத்தில் தொழுகை மிக முக்கியத்துவமானது சுவர்க்கத்தின் திறவுகோள் தொழுகை என்பதால் அதனை நிறைவேற்றுவதில் முதலில் நிய்யத்,  உட்பட வுழூ,  தொழுகை  ஆகிய கிரியைகள் முறையாக செய்யப்படவேண்டியுள்ளது. அவைகள் பற்றிய அறிவு அவசியம் என்பதால் இதுவிடத்தில் எமது மாணவர்களான உங்களுக்கு எமது மெளலவி ஆசிரியர்கள் மூலமாக இந்த பயிற்சி செயலமர்வு நடத்தப்படுகிறது இதைகுறித்து பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதுபோன்ற ஏனைய கிரியைகளுக்கான பயிற்சிகளும் எதிர்க்காலங்களில் வழங்கப்படவுள்ளன.
இதுபோன்ற செயலமர்வுகள் ஏனைய அஹதிய்யா பாடசாலைகளிலும் நடாத்தப்படவேண்டும். அந்தவகையில் அஹதிய்யா பாடசாலைக் கல்வி மாணவர்களை நல்வழியில் வாழவைக்க உதவுகிறது. எனினும் கவலை என்னவென்றால் ஞாயிறு தினங்களில் தனியார் நடாத்தும் வகுப்புகளால்  அஹதிய்யா பாடசாலைகளுக்கு மாணவர்களது வரவு குறைவடைவதுதான். இதுவிடயத்தில் தனியார் வகுப்புகளை நடாத்துவோர் ஞாயிறு தினத்தை மட்டும் விடுமுறையாகக் கொண்டு அத்தினத்தை அஹதிய்யா பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்ப வசதி செய்துகொடுக்க முன்வரவேண்டும் என அவர்களை வேண்டிக் கொள்கிறேன். பெற்றோர்களும்  இதுவிடயத்தில் அக்கறை காட்டுவார்களென நம்புகிறேன்.
சில அரச பாடசாலைகளில் இஸ்லாம் கற்பித்தல் மட்டும்தான் எனினும் பயிற்சிகள் காண்பதற்கில்லை. இந்நிலையில் அஹதிய்யா பாடசாலைகள் மூலமாக இவ்வாறான பயிற்சி செயலமர்வுகள் நடாத்தப்படுவது மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமளிப்பதாகவுள்ளது. எனவே மாணவர்கள் தவறாமல் அஹதிய்யா பாடசாலைகளுக்க சமூகமளிக்கவேண்டும்.  சன்மார்க்க பண்பாடுகளைக் கற்பித்துக்கொடுக்கும் அஹதிய்யாவில் மார்க்க விவகாரங்களில் கற்றுத் தேறிய மாணவர்கள் சிலர் முக்கிய துறைகளில் அமர்ந்து பண்புகளோடு கடமைபுரிவது கண்டு நாம் பெருமிதமடைகிறோம்.
அஹதிய்யா பாடசாலைகள் எம் சமூகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்…” என்றார்
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு ,  நிய்யத் வைப்பது , வுழூச் செய்வது, தயம்மும்  செய்வது, தொழுவது, பிராத்தனை செய்வது ஆகிய கிரியைகள் பற்றி செயல்கள் மூலமாக மொளலவி ஆசிரியர்களால் செய்து காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *