விளையாட்டு

இலங்கையை ரி20 தொடரில் சந்திக்க வரும் உகண்டா அணி..

இலங்கை அணிக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்க உகண்டா கிரிக்கெட் அணி நாளை மறுதினம் (10) இலங்கை வரவுள்ளது.

உகண்டா கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இத் தொடர் மிக அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இப் போட்டிகள் அனைத்தும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உகண்டா அணி எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ரி20 உலகக்கிண்ண தொடரில் முதன் முறையாக பங்கேற்கவுள்ளது. மேலும் குழு சி இல் இடம்பெற்றுள்ள உகண்டா அணி தனது முதல் போட்டியில் ஜுன் 3 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை கயானாவில் எதிர்த்தாடவுள்ளது.

மேலும் இலங்கை அணியுடன் முதல் ரி20 போட்டியில் இம்மாதம் 12ஆம் திகதியும், ஏனைய போட்டிகளின் முறையே 13,15,17,18,20 மற்றும் 21ஆம் திகதிகளிலும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *