உள்நாடு

சாய்ந்தமருது அல் அமானியா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 76வது சுதந்திர தின விழா..

மேற்படி நிகழ்வானது தலைவர் வை.எல். காலிதீன் தலைமையில் சங்க அலுவலகக் கட்டட முன்றலில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கல்முனை  கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் சார்பாக தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீட் கொடியினை ஏற்றிவைத்தார்.

இதன்போது அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினாலும்,  கடலரிப்பினாலும் பாதிக்கப்பட்ட சங்கத்தின் 48 அங்கத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை வலயத்திற்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி.ரி. ஆதம்பாவா, எம்.என்.எஸ். ஸர்மிலா, அல் அமானியா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அஷ்ஷேய்க். ஏ.அஷ்ரப் (தவ்லிஹி) பொருளாளர் ஏ.எம். சாதிக் ஆகியோர் உள்ளடங்கலாக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரான எம்.ஐ.எம். பரீட் உரையாற்றும் போது,
நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் சங்கத்தினை முன்னேற்றி அங்கத்தவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் இது அங்கத்தவர்களுக்கு சொந்தமான அமைப்பாக இருப்பதனால் அங்கத்தவர்களின் சந்தா, சேமிப்புக்களை அதிகரித்து உறுப்பினர்களுக்கான கடன் மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கத்தக்கபடி இலாபமீட்டக்கூடிய முறையில் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
(யூ.கே. காலித்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *