உள்நாடு

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா..

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பரப்பில் அரை நூற்றாண்டு காலம் அறிவொளி பரப்பி தென்னிலங்கையில் தலை நிமிர்ந்து கொண்டிருக்கும் பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடம் கடந்த வருடம் 2023இல் அதன் பொன்விழாவைக் கொண்டாடின. அதன் மற்றுமோர் அங்கமாக கலாபீட நிர்வாக சபையும் ராபிததுன் நளீமியின் பேருவளை வளையமும் இணைந்து எதிர்வரும் 11ஆம் திகதி (11.02.2024) ஞாயிற்றுக்கிழமை கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நாற்பெரும் விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் மர்ஜான் பளீல் பிரதம அதிதியாகவும் ஜாமிய்யா நளீமிய்யா கலாபீட பரிபாலன சபைத்தலைவர் அல் ஹாஜ் யாகூத் நளீம் விஷேட அதிதியாகவும் கலாபீட முதல்வர் அஷ் ஷெய்க் ஏ.ஸீ அகார் முஹம்மத் (நளீமி) கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வர்.
மேற்படி கலாபீடத்தின் 50ஆவது நிறைவையொற்றிய நிணைவு முத்திரை வெளியீடு, நளீம் ஹாஜியாருடன் நளீமிய்யா உருவாக்கத்திற்கு இணைந்து உளைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் வரலாற்று நூல் வெளியீடு மற்றும் ஸோலார் பவர் சூரிய சக்தி மின் உற்பத்தித்திட்டம் அங்குரார்ப்பணம் என்பன இதன் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருவளையில் பிரபல கொடை வள்ளல் நளீம் ஹாஜியாரின் தலைமையில் அங்குள்ள இதர சில தனவந்தர் பெருமக்கள் மற்றும் புத்தி ஜீவிகளின் ஒன்றினைப்போடு 1973-08-19ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் உதயமாகியது.

இன்று அது அகவை ஐம்பதை நிறைவு செய்து 51ஆவது அகவையில் கால் பதிக்கறது.ஐம்பது வருடங்களாக நளீமிய்யா சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஏன் சர்வதேசத்துக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகளோ ஏராளம்.அங்கு கற்று வெளியாகிய 1000க்கும் மேற்பட்ட கல்வி மாண்களே இதற்கு தக்க சான்றாக உள்ளார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையை பின்னோக்கிப் பார்த்தால்,

இலங்கையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, எகிப்து நாட்டில் புரட்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷா மற்றும் கண்டி நகரைச் சேர்ந்த அறிஞர் சித்தி லெப்பை ஆகியோர் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை முஸ்லிம்களின் கல்வியில் மறு மலர்ச்சி காண ஆரம்பித்தது.

கி.பி.1800களில் இறுதிப்பகுதியில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென பாடசாலைகள் எதுவும் இருக்கவில்லை ஆனால் திருக்குர் ஆனை ஓதக் கற்கவும்,சன்மார்க்க நடை முறைகளைத் தெரிந்து கொள்ளவும் கூடிய குர்ஆன் பள்ளிக் கூடங்கள் கிராம முஸ்லிம் பெரியார்களின் வீடுகளிலும்,பள்ளி வாசல்களிலும் திண்ணெப் பள்ளிக் கூடங்களாக இயங்கிவந்தன.

1890களின் பின்பே முஸ்லிம் பாடசாலைகள் கொழும்பிலிருந்து முளைக்க ஆரம்பித்தன.இவ்வாறு தலை நகரிலிருந்து தலை யெடுத்து நாட்டின் நாலா பகுதிகளிலும் தோற்றம் பெற்றுள்ள அரசினர் அன்மை காலத்தில் தணியார் கல்வி நிலையங்கள் யாவும் உலகாயத கல்விக் கூடங்கள்.என்றும் குர்ஆன் பள்ளிக் கூடங்களை ஆன்மீகக் கல்விக் கூடங்கள் என்றுமே எமது சமூகத்தினர் இன்று வரையும் எடைபோட்டு வருகின்றனர்.ஆனால் இஸ்லாமே கல்வியை ஆன்மீகம் லௌக்கம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.இந்த இரண்டு கல்வித் துறைகளையும் ஓறே குடையின் கீழ் கொணர்ந்து பொதுவான கல்விக் கூடமாக விளங்கும் ஓர் உன்னத கலாப்பீடமாகவே ஜாமியா நளீமிய்யாவின் பணிகள் அமைந்துள்ளன.

அந்த வகையில் அறிஞர் சித்தி லெப்பை அதன் பின் 1960களில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் என்ற வரிசையில் 1973இல் ஜாமிஆ நளீமிய்யாவே இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியில் புதியதொரு மைல் கல்லை கடந்து வீறு நடை போடும் முஸ்லிம்களின் கல்வி நிலையமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

1970 – 72களில் இக்கலாநிலையத்துக்கான பாடத் திட்டம் ஒன்று தயாரிப்பதற்கான குழுவொன்று அமர்த்தப்பட்டது.மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம்,மௌலவி மர்ஹ_ம் ஏ.ஆர்.ரூ{ஹல் ஹக் மௌலவி எம்.ஜே.எம்.ரியாழ் உள்ளிட்டோர்.இக்குழுவில் அங்கம் வகித்து பாடத்திட்டம் மற்றும் பாட நூல்கள்,போன்றவற்றை வகுத்துக் கொடுத்தனர்.

இதன் முதல் அதிபராக மர்ஹ_ம் மௌலவி ஏ.எம்.தாஸீன் (நத்வி) கடமையாற்றினார். விரிவுரையாலர்கலாக வெளிநாட்டவர்களும் அப்போதிருந்தே பணியாற்றி வந்தனர். உள்நாட்டைச் சேர்ந்த மர்ஹ_ம் மௌலவி மீரான் மர்ஹ_ம் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எச். சாஹ_ல் ஹமீத் (பஹ்ஜி) உள்ளிட்ட பலர் முழு நேர போதனைப் பணிகளில் கடமையாற்றி வந்தனர்.

சுமார் 50 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் மாணவர், மற்றும் போதனாசிரியர் தொகைகளிலும் விரிவாக்கம் நிகழ்ந்து கொண்டே வருவதும் இதன் வளர்ச்சிக்கு சான்றாகவுள்ளது. கலாபீடத்தை பல்வேறு வழிகளிலும் கட்டியெழுப்புவதில் பல தசாப்த காலமாக கலாபீட பணிப்பாளர் மர்ஹ_ம் எம்.ஏ.எம் சுக்ரியாற்றிய பண…
இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பரப்பில் அரை நூற்றாண்டு காலம் அறிவொளி பரப்பி தென்னிலங்கையில் தலை நிமிர்ந்து கொண்டிருக்கும் பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடம் கடந்த வருடம் 2023 இல் அதன் பொன்விழாவைக் கொண்டாடியது. அதன் மற்றுமோர் அங்கமாக கலாபீட நிர்வாக சபையும் ராபிததுன் நளீமியின் பேருவளை வளையமும் இணைந்து எதிர்வரும் 11 ஆம் திகதி (11.02.2024) ஞாயிற்றுக்கிழமை கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நாற்பெரும் விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் மர்ஜான் பளீல் பிரதம அதிதியாகவும் ஜாமிய்யா நளீமிய்யா கலாபீட பரிபாலன சபைத்தலைவர் அல் ஹாஜ் யாகூத் நளீம் விஷேட அதிதியாகவும் கலாபீட முதல்வர் அஷ் ஷெய்க் ஏ.ஸீ அகார் முஹம்மத் (நளீமி) கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வர்.
மேற்படி கலாபீடத்தின் 50ஆவது நிறைவையொற்றிய நினைவு முத்திரை வெளியீடு, நளீம் ஹாஜியாருடன் நளீமிய்யா உருவாக்கத்திற்கு இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் வரலாற்று நூல் வெளியீடு மற்றும் ஸோலார் பவர் சூரிய சக்தி மின் உற்பத்தித்திட்ட அங்குரார்ப்பணம் என்பன இதன் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருவளையில் பிரபல கொடை வள்ளல் நளீம் ஹாஜியாரின் தலைமையில் அங்குள்ள இதர சில தனவந்தர் பெருமக்கள் மற்றும் புத்தி ஜீவிகளின் ஒன்றிணைப்போடு 1973-08-19 ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் உதயமாகியது.

இன்று அது அகவை ஐம்பதை நிறைவு செய்து 51 ஆவது அகவையில் கால் பதிக்கிறது.
ஐம்பது வருடங்களாக நளீமிய்யா சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஏன் சர்வதேசத்துக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகளோ ஏராளம். அங்கு கற்று வெளியாகிய 1000க்கும் மேற்பட்ட கல்விமான்களே இதற்கு தக்க சான்றாக உள்ளார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையை பின்னோக்கிப் பார்த்தால்,

இலங்கையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, எகிப்து நாட்டில் புரட்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷா மற்றும் கண்டி நகரைச் சேர்ந்த அறிஞர் சித்தி லெப்பை ஆகியோர் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை முஸ்லிம்களின் கல்வியில் மறு மலர்ச்சி காண ஆரம்பித்தது.

கி.பி.1800களின் இறுதிப்பகுதியில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென பாடசாலைகள் எதுவும் இருக்கவில்லை ஆனால் திருக்குர்ஆனை ஓதக் கற்கவும், சன்மார்க்க நடை முறைகளைத் தெரிந்து கொள்ளவும் கூடிய குர்ஆன் பள்ளிக் கூடங்கள் கிராம முஸ்லிம் பெரியார்களின் வீடுகளிலும், பள்ளி வாசல்களிலும் திண்ணைப் பள்ளிக் கூடங்களாக இயங்கிவந்தன.

1890களின் பின்பே முஸ்லிம் பாடசாலைகள் கொழும்பிலிருந்து முளைக்க ஆரம்பித்தன. இவ்வாறு தலை நகரிலிருந்து தலையெடுத்து நாட்டின் நாலா பகுதிகளிலும் தோற்றம் பெற்றுள்ள அரசினர் அண்மை காலத்தில் தனியார் கல்வி நிலையங்கள் யாவும் உலகாதாய கல்விக் கூடங்கள் என்றும் குர்ஆன் பள்ளிக் கூடங்களை ஆன்மீகக் கல்விக் கூடங்கள் என்றுமே எமது சமூகத்தினர் இன்று வரையும் எடைபோட்டு வருகின்றனர். ஆனால் இஸ்லாமே இந்தக் கல்வியை ஆன்மீகம் லௌகீகம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. இந்த இரண்டு கல்வித் துறைகளையும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து பொதுவான கல்விக் கூடமாக விளங்கும் ஓர் உன்னத கலாப்பீடமாகவே ஜாமியா நளீமிய்யாவின் பணிகள் அமைந்துள்ளன.

அந்த வகையில் அறிஞர் சித்தி லெப்பை அதன் பின் 1960களில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் என்ற வரிசையில் 1973இல் ஜாமிஆ நளீமிய்யாவே இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியில் புதியதொரு மைல் கல்லை கடந்து வீறு நடை போடும் முஸ்லிம்களின் கல்வி நிலையமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

1970 – 72களில் இக் கலாநிலையத்துக்கான பாடத் திட்டம் ஒன்று தயாரிப்பதற்கான குழுவொன்று அமர்த்தப்பட்டது. மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம், மௌலவி மர்ஹூம் ஏ.ஆர்.ரூஹுல் ஹக் மௌலவி எம்.ஜே.எம்.ரியாழ் உள்ளிட்டோர் இக்குழுவில் அங்கம் வகித்து பாடத்திட்டம் மற்றும் பாட நூல்கள் போன்றவற்றை வகுத்துக் கொடுத்தனர்.

இதன் முதல் அதிபராக மர்ஹூம் மௌலவி ஏ.எம்.தாஸீன் (நத்வி) அவர்கள் கடமையாற்றினார். விரிவுரையாளர்களாக வெளிநாட்டவர்களும் அப்போதிருந்தே பணியாற்றி வந்தனர். உள்நாட்டைச் சேர்ந்த மர்ஹூம் மௌலவி மீரான், மர்ஹூம் கலீபதுஷ் ஷாதுலி, மௌலவி எம்.எச். சாஹுல் ஹமீத் (பஹ்ஜி) உள்ளிட்ட பலர் முழு நேர போதனைப் பணிகளில் கடமையாற்றி வந்தனர்.

சுமார் 50 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் மாணவர், மற்றும் போதனாசிரியர் தொகைகளிலும் விரிவாக்கம் நிகழ்ந்து கொண்டே வருவதும் இதன் வளர்ச்சிக்கு சான்றாகவுள்ளது. கலாபீடத்தை பல்வேறு வழிகளிலும் கட்டியெழுப்புவதில் பல தசாப்த காலமாக கலாபீட பணிப்பாளர் மர்ஹூம் எம்.ஏ.எம் சுக்ரி ஆற்றிய பணிகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் ஞாபகமூட்டவேண்டும்.

இக்கலா பீடத்தின் முதல்வர் அஷ்ஷெய்ஹ் ஏ.ஸீ.அகார் முஹம்மத் இதன் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எஸ்.எச்.எம்.பளீல், மற்றும் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ஹைருல் பஷர் உள்ளிட்ட பலர் இதன் ஆரம்ப கால மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கலாபீடம் குறித்து அஷ்ஷெய்ஹ் எஸ்.எச்.எம்.பளீல் குறிப்பிடுகையில்,
நளீமிய்யாவின் கல்விசார் இலக்குகள் கல்வித் திட்டம், பாடப்பரப்பு என்பன சிறந்த கல்விப் புலமும் அறிவார்ந்த அணுகு முறையும், பரந்த நோக்கும் ஆன்மீகப் பணபாட்டுப் பயிற்சியும் கொண்ட அறிஞர் பரம்பரையொன்றை உருவாக்கும் நோக்கைக் கொண்டவையாகும். நளீமியாவில் கற்றவர்கள் அரபு, ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழியறிவைக் கொண்டிருப்பதுடன் பாரம்பரிய இஸ்லாமிய கலாஞானங்களோடு நவீன சிந்தனைப் போக்குகளையும் இந்நாட்டின் பொதுக் கலைத் திட்டத்தையும் கற்கிறார்கள்.

நளீமிய்யாவின் கற்கை நெறி ஏழு வருடங்களைக் கொண்டதாகும். முதல் மூன்று வருடங்களைக் கொண்ட அடிப்படை கற்கைகள் பிரிவில் அரபு மொழி, அரபு இலக்கணம், தர்பியா, ஃபிக்ஹுல் ஸுலூக், தஜ்வீத் சட்டங்கள், குர்ஆன் மனனம், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுடன் க.பொ.த உயர்தரம் கலைப் பிரிவுக்கான பாடங்களும் கற்பிக்கப்பட்டு உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.

இஸ்லாமிய கற்கைகள் பீடம் நான்கு வருடங்களைக் கொண்டதாகும். இப் பிரிவில் மாணவர்களுக்கு குர்ஆன், சுன்னா விளக்கங்களும் அவற்றோடு தொடர்பான கலைகளும், இபாதத், குடும்பம், வியாபாரம், நீதித்துறை, பாகப்பிரிவினை என்பவற்றோடு தொடர்பான இஸ்லாமிய சட்டங்களும் அகீதா, முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையினராக வாழ்வதால் இலங்கையின் பன்மத, பல்லின கலாசார சூழமைவை கருத்திற் கொண்டு சமாதான கற்கைகள், இஸ்லாமிய வங்கியியல், சிறுபான்மையினருக்கான வாழ்வொழுங்கு, பிரதான மதங்கள், அவற்றின் ஒப்பீட்டாய்வு போன்ற பாடங்களும், தர்க்கவியல், சமூகவியல், இஸ்லாமிய உலகின் சிந்தனைப் பாங்குகள், தஸவ்வுப், இல்முல் கலாம், தத்துவம், ஸீரா, இஸ்லாமிய வரலாறு என்பனவும், தகவல் தொழிநுட்பத்தோடு தொடர்பான பாடங்களும் ஆங்கிலம், அரபு, சிங்களம் போன்ற மொழிகளும் போதிக்கப்படுகின்றன.

இலங்கையின் அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழக மொன்றின் பட்டப்படிப்பை வெளிவாரியாக மேற்கொள்வதற்கு மாணவர்கள் இக்காலப்பிரிவில் தயார்படுத்தப்படுவதோடு இதற்கான ஊக்குவிப்பும் வழிகாட்டல்களும் இங்கு வழங்கப்படுகின்றன. இதனால் நளீமிய்யாவின் பட்டதாரிகளாக வெளியேறுபவர்கள் ஏககாலத்தில் அதன் உள்ளக கற்கை நெறியையும் வெளிவாரிப் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

மாணவர்களது எழுத்து பேச்சாற்றல், மென்திறன்கள், மொழி, விளையாட்டுத் திறன்கள் போன்றவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு ஜாமிஆவின் வெளிக்களப் பிரிவு இயங்கி வருகிறது.

‘ராபிதா கலமிய்யா’ என்ற பெயரில் வாரா வாரம் இயங்கும் சுவரொட்டிப் பத்திரிகை மூலம் மாணவர்கள் தம் எழுத்தாற்றல்களை வளர்த்துக் கொள்கின்றனர்.அத்துடன் காலத்துக்குப் பொருத்தமான கருப்பொருட்களில் விசேட கருத்தரங்குகளும் பயிற்சிப் பட்டறைகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.

ஜாமிஆ வின் நூலகம் ஆங்கிலம், தமிழ், சிங்களம், அரபு ஆகிய மொழிகளில், சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட நூல்களையும், சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்வறிக்கைகள், என்பனவற்றையும் உள்ளடக்கிய பாரிய வாசிகசாலையாக விளங்குகிறது. இது ஜாமிஆ வின் விரிவுரையாளர்ளுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் கைகொடுத்துதவுகிறது.

நவீன பாணியிலான உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு மொழியைத் திறம்பட கற்பிப்பதற்கான அரபு மொழி ஆய்வு கூடத்தை உள்ளடக்கிய அரபு மொழி நிறுவனமும் இங்குள்ளது. மாணவர்களது கணனி மற்றும் தொழில்நுட்பத் துறையிலான அறிவுகளை விருத்தி செய்வதில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயற்பட்டு வருகிறது.

நளீமிய்யாவின் இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம் இது வரையில் அதன் ஆய்வு சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’ யின் 156 இதழ்களை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல நூல்களையும் வெளியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மீள் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட 7 பல்கலைக் கழகங்களில் ஜாமிஆவும் ஒன்றாகும். அந்தவகையில் , தேசிய ஐக்கியத்துக்கும் மீள் நல்லிணக்கத்துக்குமான முன்மாதிரியான பீடம் ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஜாமிஆ நளீமிய்யா அதிக ஜனசந்தடியற்ற மிகவும் அமைதியான சூழல் ஒன்றில் அமையப்பெற்றுள்ளது. நளீம் ஹாஜியார் உள்ளிட்ட குழுவினருக்கு இந்தக் காணி எல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருளாலேயே கிடைக்கப் பெற்றிருக்கிறதென்றே சொல்லலாம். உட்கட்டமைப்பும் மிகவும் ரம்மியமான முறையிலேயே அமைய்யப் பெற்றுள்ளது. இஸ்லாமிய கட்டிடக் கலை பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் சகல கட்டடங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இக்கலாபீடம் வெளிநாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், மனிதவள விருத்திக்காக செயற்படும் பல அமைப்புகளோடு நீண்ட காலமாக நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பது அதன் மற்றுமொரு சிறப்பாகும்.

நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ் சர்வதேச பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய உலகின் பல்கலைக் கழகங்களது ஒன்றியத்திலும் இது அங்கத்துவம் பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகளின் பலதரப்பட்ட தொடர்புகளும் நளீமிய்யாவுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகவுள்ளது.

நளீமிய்யா கடந்து வந்த ஐம்பது வருடகாலத்தில் எம் சமூகத்துக்கு அளப்பரிய தொண்டாற்றி வந்துள்ளது. அத்துடன் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டும் வந்துள்ளது.இலங்கை முஸ்லிம்களுக்குரிய மாபெரும் சொத்தாக அது பரிணமித்துள்ளது. நாட்டின் உயர் பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நளீமிய்யாவின் கற்கை நெறியை நிறைவு செய்துள்ளனர். மலேசியா, பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, யெமன், சவூதி அரேபியா, சூடான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமது உயர் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இளமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். கலாநிதி பட்டங்களையும் பெற்று நளீமிய்யாவின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் இயங்கும் பலதரப்பட்ட துறை சார்ந்த பல்கலைக் கழகங்களில் எல்லாம் நளீமிகள் துறை தலைவர்களாக, ஆய்வாளர்களாக, விரிவுரையாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்; பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இன்னும் பலர் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

எமது உள்நாட்டிலும் கூட வெளிநாட்டு தூதரகங்கள் அமைச்சு மட்டங்களிலும், அரச உயர் நிறுவனங்கள், திணைக்களங்கள், போன்றவற்றிலும் பணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களும் நளீமிகளே.
இன்னும் பல நூற்றாண்டுகள் தலை நிமிர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் போல் அருள்பாலிக்க வேண்டும். துணைநிற்க வேண்டும் என்று முழு நாட்டு முஸ்லிம்களும் பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாக இன்று திகழ்வது ஜாமிஆ நளீமிய்யா தான்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *