விளையாட்டு

ரவீந்திர மற்றும் வில்லியம்ஸனின் சதங்களால் தென்னாப்பிரிக்காவை வென்றது நியூசிலாந்து..

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ரிச்சின் ரவீந்திரவின் இரட்டைச் சதம் மற்றும் கேன் வில்லியம்ஸனின் இரு சதங்களின் உதவியுடனும் தென்னாபிரிக்க அணியை 281 ஓட்டங்களால் இலகு வெற்றி கொண்ட நியூசிலாந்து தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

தென்னாபிரிக்க அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் முதல் போட்டி கடந்த 4 ஆம் திகதி மவுண்ட் மங்கவ்ணியில் ஆரம்பித்தது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. குறிப்பாக தென்னாபிரிக்க அணி இளம் அறிமுக பல வீரர்களை இத் தொடரில் களமிறங்கியுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பாட்டிய நியூசிலாந்து அணி ரிச்சின் ரவீந்திரவின் 240 ஓட்டங்கள் மற்றும் கேன் வில்லியம்ஸனின் 118 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கட்டுக்களையும் இழந்து 511 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் நைல் பிரென்ட் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 162 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் கீகன் பீட்டர்சன் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் ஹென்றி மற்றும் சான்ட்ணர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 349 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி கேன் வில்லியம்ஸனின் சதத்தின் உதவியால் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றிருக்க இன்னிங்ஸை நிறைவு செய்தது. வில்லியம்ஸன் 109 ஓட்டங்களை பதிவு செய்தார்.
பின்னர் 528 என்ற வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணிக்கு டேவிட் பெடிங்காம் மாத்திரம் அரைச்சதம் கடந்து நிலைத்திருக்க மற்றைய வீரர்கள் நிலைக்காமல் போக சகல விக்கட்டுக்களையும் இழந்த தென்னாபிரிக்க அணி 247 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 281 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 முன்னிலை பெற்றது. பந்துவீச்சில் ஜெமிஸன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக இரட்டை சதம் அடித்த ரிச்சின் ரவீந்திர தெரிவானார்.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *