விளையாட்டு

தோல்வியின் எதிரொலி; இந்தியாவை விட்டு வெளியேறியது இங்கிலாந்து..

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி போட்டி முடிந்த சில மணி நேரத்தின் பின் இந்தியாவை விட்டு வெளியேறியது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இத் தொடரில் முதல் போட்டியில் சொந்த மண்ணில் இந்திய அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. பின்னர் கடந்த 2ஆம் திகதி ஆரம்பித்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஜாய்ஸ்வால் மற்றும் பும்ரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 106 ஓட்டங்களால் வெற்றி பெற்று பதிலடி கொடுத்து தொடரை 1:1 என சமன் செய்தது.

இந்நிலையில் குறித்த தொடரின் மூன்றாவது போட்டி இன்னும் 10 நாட்களின் பின்னர் ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிலாந்து அணி ஒரு வார கால பயிற்சிக்காக அபுதாபி புறப்பட்டது. நேற்றைய தினம் மதிய போசனை இடைவெளிக்குப் பின்னர் போட்டி முடிந்த கையோடு இங்கிலாந்து அணி தற்காலிகமாக இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளது இங்கிலாந்து அணி.

மேலும் அபுதாபிக்கு சென்று அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் ஈடுபட்டு புத்துணர்ச்சியுடன் மிகுதி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. மேலும் இத் தொடர் ஆரம்பிக்க முன்னர் இங்கிலாந்து அணி அபுதாபியில் 3 வார கால பயிற்சியில் ஈடுபட்ட பின்னரே இந்தியா வந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *