உள்நாடு

“தேசிய மறுமலர்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி..”       – மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

(“பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” – தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – பொலநறுவை மாவட்டம் – 2024.02.03)

எதிர்காலத்தில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த பிரமாண்டமான பெண்கள் சக்திக்கு முன்னால் வாக்குகளை கோருவதல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி “நான் தோற்றுவிட்டேன்” என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரிடும். எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க இதுவரை தொடர்புபட்டிராத பிரமாண்டமான ஒரு சக்தி பெண்களே என்பதை அவர் ஏற்றுக்கொள்ள நேரிடும்.

எமது நாட்டின் சமூகத்திற்காக பெண்கள் பாரிய செயற்பொறுப்பினை ஈடேற்றினாலும் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. அரசியலில் இருந்தும் அவர்கள் விலக்கிவைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது எம்மால் பெண்களை ஒரு சக்தியாக, அமைப்பாக கட்டியெழுப்ப இயலுமானதாகி உள்ளது. பொலநறுவை மாவட்டத்தின் “பெண்கள் சக்தியே” இங்கு இருக்கின்றது. வரலாற்றில் முதல்த்தடவையாக பெண்கள் ஒரு சக்தியாக ஒழுங்கமைந்து சமமான உரிமைகளுடன் முன்வந்துள்ள ஒரு தருணமாகும். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள், சஜித் பிரேமதாசாக்கள் ஒன்றுதிரண்டு வந்தாலும் எதிர்கால அரசியல் வெற்றி தேசிய மக்கள் சக்திக்குரியதாகும். இந்த சக்தியை தோற்கடிக்கவல்ல பிறிதொரு சக்தி இலங்கையில் கிடையாது. 05 ஆந் திகதி ரணில் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க தம்புள்ளைக்கு வருகிறாராம். காணி உறுதிகளை வழங்க பெண்களை பிரிவுவாரியாக சேர்க்கிறார்கள். எமது காணிகள் நி்ர்ணயம் செய்யப்படவில்லை. எமது காணியின்மையைப் பயன்படுத்தி அவர்கள் இடைக்கிடையே உறுதிகளை வழங்குகிறார்கள். உறுதி கிடைக்கின்றது: காணி உரிமை கிடைப்பதல்லை. எமக்கு உறுதிகளை வழங்கினாலும் காணிகளை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கப் போகிறார்கள். அரசாங்கத்திற்குச் சொந்தமான 32 பாற்பண்ணைகளை “இந்தியாவின் அமூல்” கம்பெனிக்கு கொடுக்கப் போகிறார்கள். 32 விவசாயப் பண்கைகளுக்குள் 28,000 ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அத்தகைய ஏமாற்றுவேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் காணி உறுதிகளை வழங்க, அஸ்வெசும வழங்க, குறைந்த வருமானம் பெறுபவர்கள், நுண் நிதிக்கடன் என்றவகையில் குழுக்களைக் கொண்டுவந்து தமது தேர்தல் இயக்கத்தை மேற்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அந்த பழைய விளையாட்டுக்கள் தற்போது செல்லுபடியாகாது என்பதை நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறுகிறோம். அந்த பழைய அரசியலை தோற்கடித்து எந்த தேர்தல் வந்தாலும் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விக்க மக்கள் தீர்மானித்துள்ளார்கள். அந்த தீர்மானத்திற்கு மாபெரும் பக்கபலமாக “பெண்கள் சக்தி” அமைந்துள்ளது. இதுவரைகாலமும் ஒளிந்திருந்த பெண்கள் ஒரு சக்தியாக, திடசங்கற்பத்துடன் முன்வந்து கூறுவது “நீங்கள் எந்த தேர்தலைக் கொண்டுவந்தாலும் “இந்த ஆட்சியாளர்களைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்திட நாங்கள் தயார்” என்பதையாகும்.

நீங்கள் இங்கே வந்திருப்பது சமுர்த்தியை பெறுவதற்காக, அஸ்வெசும அமைத்துக்கொள்ளவதற்காக, காணி உறுதியைப் பெற்றுக்கொள்வதற்காகக அல்ல. 76 வருடங்களாக எமது நாட்டில் நிலவிய ஆட்சி தவறானது, அதனை மாற்றயமைத்திட வேண்டும். மாற்றியமைத்திட நாங்கள் முன்வரத் தயாரென்ற நம்பிக்கையில்தான். நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே விளைகிறோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த அதிகாரத்தைப் பாவித்து, அந்த அதிகாரத்தைப் பிரயோகித்து எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். உங்களுக்கும் எமக்கும் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. இந்த கொடிய, திருட்டுக் கும்பலை தோற்கடித்து மக்களின் அரசாங்கமொன்றை ஆண் – பெண் இருசாராருக்கும் சமஉரிமைகள் கிடைக்கின்ற, பெண்களை கௌரவமாக கவனிக்கின்ற சமூகமொன்றை அமைத்திட வேண்டும். அந்த சமூகத்தில் பிரமாண்டமான மாற்றத்தை எற்படுத்திக்கொள்ள எமக்கு புரிந்துணர்வு இருக்கவேண்டும்.

பொருளாதாரரீதியாக அடிமட்டத்திற்கே வீழ்த்திய, வங்குரோத்து நிலைக்குள்ளாக்கிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். எம்மெதிரில் இருக்கின்ற சவால்கள் எளிமையானவையல்ல. நிவாரணம் வழங்குவதென்பது பசளையைக் கொடுப்பதோ அல்லது கெரட் விலையைக் குறைப்பதோ அல்ல, ஐயாயிரம் ரூபாவினால் சம்பளத்தை அதிகரிப்பதுமல்ல. வீழ்த்தப்பட்ட நாசமாக்கப்பட்ட பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற சவால் எம்மெதிரில் இருக்கின்றது. இந்த பொலநறுவை மாவட்டம் பெருந்தொகையான கமக்காரர்கள் இருக்கின்ற, நாட்டுக்கு சோறுபோடுகின்ற மாவட்டமாகும். ஆனால் இந்த மாவட்டங்களிலேயே பெருந்தொகையான வறியவர்கள் இருக்கிறார்கள். எமக்கு மனிதர்கள் என்றவகையில் உயிர்வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. நாடு வங்குரோத்து என்பதை ஏற்றுக்கொண்ட ஓர் அரசாங்கம் கோல்ஃபேஸ் அருகில்சென்று கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் பயனில்லை. வங்குரோத்து அடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. எமது பிள்ளைகளின் தலைமீது பாரிய கடன்மேடு இருக்கின்றது. நாடு உலகிற்கு கடன்பட்டுள்ளது. மக்கள் நுண் நிதிக் கடன் சுமையில் இருக்கிறார்கள். கடன் சுமையால் பிழியப்பட்ட மக்களே இருக்கிறார்கள். சனத்தொகையில் பெரும்பாலானோர் மூன்றுவேளை உணவு உண்பதில்லையென அறிக்கைகள் கூறுகின்றன. இப்போது அரசாங்கம் மீண்டும் பதினோராயிரம் மில்லியன் ரூபா கடன்பெற பார்த்துக்கொண்டு இருக்கின்றது. மறுபுறத்தில் வரிச்சுமை ஏற்றப்படுகின்றது. வீழ்த்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்திட வேண்டும். அதற்காக சொத்துக்களை ஈட்டுகின்ற உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கிடவேண்டும். அத்தகைய பொருளாதாரமொன்றை அமைத்திட சேர்த்துக்கொள்ளக்கூடிய பிரமான்டமான சக்திதான் பெண்களின் சக்தி. அதைப்போலவே பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் நியாயமாக பகிர்ந்துசெல்ல வேண்டும்.

எமது பொருளாதாரத்தின் உரிமை எமக்கு கிடையாது. அரசாங்கத்தின் நிதி பற்றிய கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். நாங்கள் எவ்வளவு வரி விதிக்கவேண்டும் வங்கிகளுக்கு அரச நிறுவனங்களுக்கு என்பதை தீர்மானிப்பவர்கள் அவர்களே. நாங்கள் பொருளாதாரரீதியாக சுயாதீனமற்றவர்கள். பொருளாதாரம் வங்குரோத்து என்பதைப்போன்றே சுயாதீனமானதுமல்ல. சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் பலனில்லை. பொருளாதாரரீதியாக சுயாதீனமற்றவர்கள். சமூகரீதியாக சுயாதீனமற்றவர்கள். எமது கொள்கைகளை நாங்கள் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமில்லாத ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். பொருளாதாரத்தை சீரமைக்க மனித வளம் மற்றும் இயற்கை வளம் வேண்டும். தற்போது மனிதவளம் நாட்டைவிட்டுச் செல்கிறது. மறுபுறத்தில் சொத்துக்களை ஈட்டக்கூடிய பெரும்பாலான இயற்கை வளங்கள் இலங்கைக்குச் சொந்தமானதாக இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் டொலர்களை ஈட்டக்கூடிய ஒரு வளமாகும். துறைமுகத்தின் 99 வருடகால உரிமையை ரணில் விக்கிரமசிங்கவே சீனாவுக்கு கொடுத்தார். கொழும்புத் துறைமுகத்தின் ஒரு முனையம் எமக்குச் சொந்தமானது. ஏனையவை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கே சொந்தமானவை. ரெலிகொம் நிறுவனத்தையும் கொடுக்கப் போகிறார்கள். ஒருபுறத்தில் பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்கிறார்கள். மறுபுறத்தில் சுயாதீனத்தன்மையை இழக்கச் செய்துள்ளார்கள். பொருளாதாரத்தை சீர்செய்யக்கூடிய வளங்களை விற்றுவிட்டார்கள். பிரச்சினை பாரதூரமானது. உறுதிகளை வழங்கி, சமுர்த்தியை வழங்கி, அஸ்வெசும வழங்கி அதிலிருந்து விடுபட இயலாது. இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீட்டுக்கவேண்டும். எமக்கு பலமான உறுதியான பொருளாதாரமொன்று தேவை. சுயாதீனமடைய வேண்டும். அடிமைநிலையிலிருந்து விடுபட வேண்டும். அதற்கான தேசிய எழுச்சி தேவை. தேசிய மறுமலர்ச்சி தேவை. அதற்கு தலைமை வகிக்கக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். அதற்கான பொரும்பங்கினை பெண்களாகிய உங்களாலேயே ஆற்றமுடியும். நீங்கள் “ஒரே மூச்சுடன்” என்றால் அந்த சக்தியை தோற்கடிக்க எவருமே கிடையாது.

பொருளாதாரம் மாத்திரமல்ல சமூகமும் சிதைக்கப்பட்டுள்ளது. அரசியல் குப்பையாக்கப்பட்டுவிட்டது. மோசடி, உழல், களவுகள் நிரம்பி வழிகின்றன. திருடாத ஓர் ஆட்சியாளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தகாலத்தில் மக்களை கொலைசெய்கின்ற அளவுக்கு தரங்குறைந்த மருந்துகளைக் கொண்டுவந்தார்கள். விசாரணையின்போது உத்தியோகத்தர்கள் மாட்டிக் கொண்டார்கள். அமைச்சர் கைதுசெய்யப்படவில்லை. அமைச்சர் பதவி மாற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தி திருடனைப் பாதுகாத்தார்கள். பின்னர் அமைச்சு மாற்றப்பட்டது. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அமைச்சர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றம் றிமாண்ட் பண்ணியது. எனினும் சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. சுகவீனம் எனக்கூறி சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றார். பார்த்தால் அமைச்சர் பதவியை வகித்தவர் ஒரு நோயாளி. நோயாளிகள் எப்படி நாட்டை ஆள்வது. சரியென்றால் அமைச்சுப் பதவிகளை கழற்றவேண்டும். நாங்கள் நோயாளிகளுக்கே அரசாங்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறோம். திருடி அகப்பட்டு றிமாண்டுக்குப் போட்டால் அவர்கள் எல்லோருமே வைத்தியசாலைக்குப் போகிறார்கள். அவர்களின் அரசாங்கங்கள் அவர்களுக்கு தண்டனை வழங்க மாட்டாது. ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தால் தண்டிக்கின்ற அரசாங்கமொன்று கிடையாது. திசைகாட்டியால் மாத்திரமே அவ்வாறான அரசாங்கமொன்றை அமைத்திட முடியும்.

எமது நாட்டில் மனிதம் கிடையாது. பெண்களுக்கு பிள்ளைகளுக்கு வீதியில் செல்ல முடியாது. எல்லா இடத்திலும் போதைப்பொருள். ஒரு நாளுக்கு தொள்ளாயிரம்பேர் கைது செய்யப்பட்டதாக தற்போது நாள்தோறும் செய்திவெளியாகிறது. அப்படியானல் ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம்பேர் பிடிக்கப்படுகிறார்கள். முழு நாடுமே தூள்தானா என நினைக்கலாம். நாட்டின் நெறிமுறைகள் சிதைக்கப்பட்டு, சகோதரத்துவமும் கூட்டுணர்வும் நாசமாக்கப்பட்டுவிட்டது. இந்த குப்பை அரசியலை மாற்றியமைத்திடவேண்டும். தனிப்பட்ட முறையில் எதனையும் எதிர்பாராமல் நாட்டை மாற்றியமைக்கின்ற போராட்டத்தில் தலைமை வகிக்கவும் தயார் என்பதை பெண்களாகிய நீங்கள் எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். இந்த நாட்டின் துன்பம் அனுபவிக்கின்ற இறுதிப் பரம்பரையினராக நாங்கள் அமையவேண்டும். இன்னும் ஒன்பது மாதங்களில் இந்த நாட்டை மாற்றியமைத்திட நாங்கள் தயார். அதற்கு பலம் சேர்ப்பதற்காகவே நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் அந்த முயற்சிக்கு நாங்கள் மதிப்புடன் தலைசாய்க்கிறோம். பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்றியமைத்து சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய தேசமொன்றை அமைத்திட வேண்டும்.

எமக்கு புதிய சுதந்திரப் போராட்டமொன்று இருக்கின்றது. இந்த நாட்டின் உரிமையை உண்மையான உரித்தாளிகளின் கைகளுக்கு கைமாற்றவேண்டும். பொருளாதாரத்தை சீரமைத்திட வேண்டும். அடிமைநிலையில் இருந்து மீட்புபெற்று சுயாதீனத்தன்மையை அடையவேண்டும். எமது சிந்தனை மாற்றமடைய வேண்டும். பொதுவில் மக்களைப்பற்றிச் சிந்திக்கின்ற, சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டுமெனச் சிந்திக்கின்ற சமூகமொன்றை அமைக்கவேண்டியது அவசியமாகும். மனிதம் மனித மனங்களில் உதிக்கவேண்டும். அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும். எமது நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுத நாங்கள் தயார். அதற்காக முன்னணி வகிக்க பெண்களாகிய நாங்கள் தயார். அந்த சமூகத்தை சீராக்குகின்ற சக்தியாக எமது சகோதரிகள் ஒன்றிணையவேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது பலத்தை கெட்டியாக்குவொம். மக்களாட்சியை உருவாக்குவோம். 2025 இல் காலடி எடுத்துவைப்பது எமது ஆட்சியின் கீழேயே எனும் திடசங்கற்பத்துடன் நாங்கள் கைகோர்த்திடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *