தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பாரிய அளவில் அதிகரிப்பு – இலங்கை வாக்காளர்களிடம் பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் புதிய திருப்பம்
தேசிய மக்கள் சக்திக்கு 2023 டிசம்பரில், ஏனைய கட்சிகளை விட அதிகளவு ஆதரவு காணப்பட்டமை, கருத்துக்கணிப் பொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
‘இன்ஸ்ரிரியூட் ஒவ் ஹெல்த் பொலிசி’ என்ற நிறுவனம் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கம் குறித்து, வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்திக்கு 39 வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளி யிட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக் திக்கு 27 வீதமானவர்கள் தங்கள் ஆதரவை தெரியப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆறு வீத ஆதரவும், மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பத்து வீத ஆதரவும் காணப்படுவதை, இந்தக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மூன்று வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இதன்பிரகாரம், தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு, 2022 முதல் அதிகரித்து வருவதை, இந்தக் கருத்துக் கணிப்பு புலப்படுத் துகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் தனது ஆதரவை அதிகரித்துள்ளது. ஆனால், மந்த கதியிலேயே இந்த ஆதரவு அதிகரிப்புக் காணப்படுகின்றது என, குறித்த கருத்துக் கணிப்பினை மேற்கொண்ட அமைப்பு தெரிவித் துள்ளது. மேலும், 2022 முதல் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் காணப்ப டுகின்றது.
இது தவிர, 2023 டிசம்பர் கருத்துக் கணிப்புகள், ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு, தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதைக் காண்பிக்கின்றன எனவும், அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
(ஐ. ஏ. காதிர் கான்)