சுதந்திர தின தேசிய நிகழ்வை புறக்கணித்த அரசியல் தலைவர்கள்..
இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கோலாகல விழாவில், தாய்லாந்து பிரதமர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
வெளிநாட்டு ராஜதந்திரிகள், அழைக்கப்பட்ட இலங்கையின் விசேட பிரதிநிதிகள், கட்சிகளின் தலைவர்கள் இதிலே கலந்துகொண்டனர்.
என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விழாவை புறக்கணித்துள்ள அதே நேரம், நாட்டின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
முப்படை வீரர்களின் அணிவகுப்புகள், விமானப்படையினரின் சாகசங்கள், கடற்படை வீரர்களின் சாகசங்கள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகள் தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் கோலாகலமாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
.