உள்நாடு

கண்டியில் இடம் பெற்ற முன்னாள் கண்டி உதவி இந்தியத் தூதுவர் ஏ. நட்ராஜனின் நூல் அறிமுக விழா..!

கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தின் முன்னாள் உதவித் தூதுவரும், யாழ்பாண இந்தியத் தூதரகத்தின் முன்னாள் கண்சியூலர் ஜெனலருமான ஏ. நட்ராஜா அவர்கள் எழுதிய ஆங்கில நூலின் அறிமுக விழா கண்டி பேராதனை வாடி வீட்டில் அமைந்துள்ள ‘பிரின்சஸ் போல் ரூம்’ மண்டபத்தில் நேற்று (03.02.2024) இடம் பெற்றது.
‘புரம் த விலேஜ் டூ த குளோபல் ஸ்டேஜ்’ (From the villege to the globle stage – கிராமம் முதல் பூலோக மேடை வரை) என்ற அனுபவத் தொகுப்பு நூல் அறிமுக விழாவில் கண்டியில் இயங்கும் 10 ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன. பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம்ட காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, முன்னாள் சக்ரகமு மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, புரவலர் ஹாசிம், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உற்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி ரவூப் ஹகீம் அவர்களிடமிருந்து முதற்பிரதியை புரவலர் ஹாசிம் ஒமர் பெற்றுக் கொள்வதையும் நூல் ஆசிரியர் ஏ.நட்ராஜன் கௌரவிக்கப்படுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மங்கள விளக் கேற்றுவதையும் கலா சமர்பணம் நர்தன சேத்திரா நடன ஆசிரியை பிரசாதினி நவரத்னராஜா அவர்களின் மாணவியர்களின் வரவேற்பு நடனம் என்பவற்றை காணலாம்.

கண்டி மக்கள் கலை இலக்கியப் பேரவை, மலையக கலை கலாசார சங்கம் (இரத்தின தீபம் அமைப்பு), கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம், கண்டி இந்து இளைஞர் சங்கம், மத்திய மாகாண இந்து மா மன்றம், கண்டி தமிழ் சங்கம், கண்டி முத்தமிழ் சங்கம், மாத்தளை தமிழ் இஸ்லாமிய இலக்கியப் பேரவை, மாத்தளை மகாத்மா காந்தி மன்றம், ஆசோக்கா குழுமத்தின் தலைவர் பீ.டீ.ஆர். ராஜன், சன்ரைஸ் பிஸ்கட் கம்பணி பணிப்பாளர் சமூகசோதி எஸ் முத்தையா ஆகியோரின் ஏற்பாட்டில் இது நடை பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *