உள்நாடு

சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வுகள் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாசலில்..!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வுகள் கொழும்பு 11 இரண்டாம் குறுக்கு தெரு அல் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆ பள்ளி வாசலில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் இடம்.ஏ.எம்.பைஸலின் வழிநடத்தலில் இன்று (04) காலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரி தலைமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் அதிகாரிகள் உலமாக்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய வழிபாட்டு திணைக்கள பணிப்பாளர் அநிருத்தனன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் அதிகாரிகள் இந்து குருமார்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *