உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு..

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி மூன்றாம் திகதி (03-02-2024) கொழும்பு-12 புதிய சோனகத் தெருவிலுள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மு.ப 8:30 முதல் பி.ப 3:30 வரை நடைபெறும்.

மேற்படி பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் எம் தாஹிர் ரஸீன் வரவேற்புரையும் பிறைக்குழு தலைவர் கலீபத்துஷ் ஷாதுலி மௌலவி அல் உஸ்தாத் அல்ஹாஜ் எம்.பீ.எம் ஹிஷாம் (பதாஹி) அறிமுக உரையும் நிகழ்த்துவர்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைஸல், பிறைக்குழு உப தலைவரும் புத்தளம் அப்துல் மஜீத் எகடமியின் பணிப்பாளருமான மௌலவி அல் உஸ்தாத் எச் அப்துல் நாசர் (ரஹ்மானி), வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம் ஸாலிஹீன், பிறைக்குழு உப செயலாளர் மௌலவி எம் ஆர் அப்துர் ரஹ்மான், பிறைக்குழு பொதுச் செயலாளர் மௌலவி அல் உஸ்தாத் ஏ.எல்.எம் மதீம் மஹ்தூமி (அல் ஹசனி), பிறைக்குழு உறுப்பினரும் தெஹிவளை அல் மஹ்தூமியா அரபுக் கல்லூரி அதிபருமான மௌலவி அல் உஸ்தாத் ஸீ.ஐ.எம் அஸ்மீர் (அல் ஹசனி), பிறக்குழு பிரதித் தலைவரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவரும் திஹாரிய அல் ஹசனியா அரபுக் கல்லூரியின் அதிபருமான அல் உஸ்தாத் மௌலவி ஏ.எல்.எம் ரிழா மஹ்தூமி (அல் ஹசனி) பிறைக்குழு உப தலைவர் மௌலவி அல் உஸ்தாத் ஏ.எச்.ஏ சுஐப் (அல் ஹசனி) ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் உரை நிகழ்த்துவர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை பொதுச்செயலாளர் அல்ஹாஜ் பாரிஸ் பஹ்மி நன்றியுரை நிகழ்த்துவதோடு மேற்படி பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எஸ்.எம்.எம் தல்ஹா (பாரி) துஆ பிரார்த்தனை புரிவார்.

கொழும்பு உம்மு சாவியா பிரதம இமாம், அஜ்வாத் அல்பாஸி அரபுக் கல்லூரி அதிபர் கலீபத்துஷ் ஷாதுலி மௌலவி எம்.எஸ் அஹமட் (மஹ்லரி) நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கவுள்ளார்.

 

(பேருவளை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *