விளையாட்டு

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அதிகாலை இலங்கை வந்தடைந்தது..!

இலங்கை அணிக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகைப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றது. பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் ஆகியவற்றில் பங்கேற்கின்றது. இந்நிலையில் ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது.

இதற்கமைய ஒற்றை டெஸ்ட் போட்டி எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் இப் போட்டியை ரசிகர்கள் இலவசமாகக் கண்டுகளிக்க முடியும் என இலங்கை சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *