முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி..!
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த கொழும்பு மாவட்ட முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போராட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகத்தின் போதான சுவாசக் கோளாறு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மேலும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலைக்கு உடனடி விஜயம் மேற்கொண்டமையும், கூடவே ஐ. தே. க. இன் பாராளுமன்ற உறுப்பினர்களை அவசர கூட்டத்திற்காக கட்சி அலுவலகத்திற்கு அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.