உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கும் “உபஹார” கையடக்க தொலைபேசி வசதிகள்

அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் “உபஹார” ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) மொபிடெல் கையடக்க தொலை பேசி வசதிகளை, அலுவலக மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் விரிவுபடுத்துமாறு, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) மொபிடெல் நிறுவனத்தைக் கேட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டைகளை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் “உபஹார” ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடெல் வசதிகளை விரிவுபடுத்துமாறு, வெகுஜன ஊடக அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த பணிப்புரைக்கமைவாகவே, இவ்வசதிகள் அலுவலக மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, அவர் SLT மொபிடெல் நிறுவனத்திடம் வேண்டியுள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *