விளையாட்டு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்: தோல்வியடைந்த இந்திய அணி பின்தள்ளப்பட்டது..!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் நேற்றைய தினம் நிறைவுக்கு வந்த இரு போட்டிகளின் முடிவில் முன்னனியில் இருந்த இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் அடைந்த தோல்வியை அடுத்து 5ஆம் இடத்திற்கு சரிவடைந்துள்ளது. இருப்பினும் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்ற அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் உலகக்கிண்ண தொடர் போன்று டெஸ்ட் போட்டியிலும் சம்பியன் கிண்ணமொன்றை வைத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் என ஆரம்பித்திருந்தது. அதற்கயை ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் பங்கேற்கின்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி அடையும் சந்தர்ப்பத்தில் புள்ளிகளுடன் வெற்றி சதவீதம் கணக்கிடப்பட்டு வருட இறுதியில் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் உலக டெஸ்ட் வம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும்.
அந்தவகையில் முதல் உலக டெஸ்ட் வம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதியிருக்க நியூஸிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டிருந்தது. மேலும் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற உலக டெஸ்ட் வம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை எதிர்த்தாடி தோல்வியடைய அவுஸ்திரேலியா சம்பியனாகியிருந்தது.

இந்நிலையில் நடப்பு பருவ காலத்திற்கான உலக டெஸ்ட் வம்பியன்ஷிப் தொடரின் புதிய புள்ளிப்பட்டியல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் நிறைவுக்கு வந்த இந்திய எதிர் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் அவுஸ்திரேலிய எதிர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டி ஆகியன நிறைவின் பின்னரே மேற்படி புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய தொடர்ந்தும் முதலிடத்தில் அவுஸ்திரேலிய அணி நீடிக்கின்றது. இதுவரையில் 10 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றிகள் 3 தோல்விகள் மற்றம் ஒரு சமநிலையுடன் 66 புள்ளிகளுடன் 55 சதவீத விகிதாசாரத்தில் முன்னிலை வகிக்கின்றது.

2ஆம், 3ஆம் மற்றம் 4ஆம் இடங்களில் 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றி மற்றம் ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்று 50 சதவீத வெற்றி விகிதாசாரத்தில் தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணி 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி 2 வெற்றி மற்றும் தோல்வி, ஒரு வமநிலையுடன் 26 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் 43.33 என்ற வெற்றி சராசரியைப் பெற்றுள்ளது.

இத் தரப்படுத்தலில் கடந்த மாதத்திற்கு முன்னர் 2ஆம் நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3:0 என வெள்ளையடிப்பு வாங்கி தொடரை இழந்தமையால் 6ஆம் இடத்திற்குக் கீழிறங்கியுள்ளது. 5 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி , 3 தோல்லிகளுடன் 22 புள்ளிகளைப் பெற்று 36.66 என்ற வெற்றி சராசரியைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இரு இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன.

மேலும் இத் தரப்படுத்தலில் இறுதி 9ஆவது இடத்தில் இலங்கை அணி உள்ளது. இதுவரையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற இலங்கை இரு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிக்கணக்கை இலங்கை அணி இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிக்கணக்கை ஆரம்பிக்குமா இலங்கை அணி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *