உள்நாடு

வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெப்ரவரி முதல் முன்னெடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், பெப்ரவரி மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரம், தேசிய தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தெரிவு சட்டத்துக்கு அமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.
வாக்காளர் பெயர் பதிவு நடவடிக்கைகள், எதிர்வரும் ஜூலை மாதமளவில் நிறைவடையும்.
அதனைத் தொடர்ந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு நான்கு அல்லது நான்கு வார காலத்துக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.
மேலும், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
ஆனால், நிதி விடுவிப்பு தாமதமானதால், தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *