உள்நாடு

‘மத்ரஸத்துல் பாரி’ அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடவேண்டும் என்னும் தீர்மானத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.. -அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் (நளீமி)

இலங்கை மத்ரஸா வரலாற்றில் முன்னோடி அரபுக் கல்லூரிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் ‘மத்ரஸதுல் பாரி’ அரபுக் கல்லூரியில் கற்கும் ஒரு மாணவரை, குறித்த கல்லூரியின் ஓர் ஆசிரியர் அடித்துக் காயப்படுத்திய சம்பவத்தை முன்னிறுத்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
அந்தக் கல்லூரியை, தற்காலிகமாக மூட வேண்டுமென தீர்மானம் எடுத்தமை, பொருத்தமானதொரு நடவடிக்கையாகத்தெரியவில்லை. இக்கருத்தில் சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் அனைவரும் என்னுடன் உடன்படுவார்கள் என நம்புகிறேன்.
ஓர் ஆசிரியரின் நடவடிக்கைக்காக, முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்குப் பதிலாக, குறித்த அரபுக் கல்லூரியையே உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறன்.
‘Corporal Punishment’ என வழங்கப்படும் உடலியல் ரீதியாக பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய தண்டனை பற்றிய மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர், கீழ்வரும் கட்டுரையை வாசிக்கவும்.
(இந்த அறிக்கை எமது நாட்டை மையப்படுத்தியது):
Corporal Punishment of children in Sri Lanka – Country report
பின்வரும் விடயங்களில் போதிய தெளிவு இருப்பதானது, தகுதியும் நம்பிக்கையுமான நிலைப்பாட்டை வலியுறுத்தும் என காண்கிறேன்:
1. உடலியல் ரீதியாக பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய (Corporal Punishment) வகையில் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் தண்டனை முறை பற்றிய ஒரு பொதுவான பார்வையும், உலகளாவிய மட்டத்தில் அது பெற்றிருந்த செல்வாக்கு மற்றும் அது தொடர்பில் நவீன உலகில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் முதலான தெளிவைப் பெற்றிருத்தல்.
2. உடலியல் ரீதியாகப் பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய (Corporal Punishment) தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்குவது குறித்த சட்ட ரீதியான ஏற்பாடுகள், இலங்கையில் எப்போது கொண்டு வரப்பட்டன; கோட்பாட்டளவில் அது எழுத்து வடிவில் காணப்பட்டாலும், அதன் நடைமுறை எவ்வாறு காணப்படுகிறது என்ற விடயத்தை ஆராய்தல்.
(இதற்கு இக்கட்டுரைகளை வாசிக்கலாம்–>)
3. இலங்கையில் ஒரு கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் அல்லது ஒரு குழு மூர்க்கத்தனமான முறையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதற்காக, முழு நிறுவனத்தையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதைத் தேடுதல்.
(பின்வரும் சம்பவங்களில் குறித்த பாடசாலைகள் மூடப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை; குறித்த நபர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் (நளீமி) தெளிவுபடுத்தியுள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *